பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. சலோ, பாண்டிச்சேரி!

LDணியின் கரம் சுந்தரின் கரத்தைப் பற்றிக்கொண்டு இருந்தாலும், அவனுடைய கண்கள் மட்டும் பேச்சு மூச்சின்றி அப்படியே சோபாவில் சாய்ந்துவிட்ட அருணாவையே நோக்கிக்கொண்டு இருந்தன.

சுந்தரை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்த ரூபா ஒன்றும் புரியாமல், ‘என்ன அருணா, என்ன உடம்புக்கு?” என்று அவள் தோளைப் பிடித்து உலுக்கினாள். ‘உடம்புக்கு ஒன்றுமில்லை; நீங்கள் கொஞ்சம் எட்டி நில்லுங்கள்!’ என்று அவளைக் கொஞ்சம் எட்டி நிற்கச் செய்துவிட்டு, மோகன் ஒரு சோடாவைத் திறந்து வாங்கி அவள் முகத்தில் அடித்து குடிக்கச் செய்தான். மேலே சுழலும் மின்சார விசிறியின் காற்று போதாதென்று நினைத்தோ என்னமோ, பாமா வேறு தன் கையிலிருந்த பாட்டுப் புத்தகத்தால் அவளுக்கு விசிறினாள்

“மொடக், மொடக் என்று இரண்டு மொடக்கு சோடா உள்ளே சென்றதுதான் தாமதம், கண் விழித்த அருணா தன்னைச் சுற்றி நின்றவர்களை நோக்கி, ‘எல்லோரும் என்னை ஏன் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்?’ என்றுக் கேட்டாள் வியப்புடன்.

‘இன்னொரு முறை மூர்ச்சையாக மாட்டாயா என்று தான் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்’ என்றான் மோகன், சிரித்துக்கொண்டே.

அப்போதுதான் தன்னுடைய நிலையை ஒருவாறு உணர்ந்த அருணா, ‘ஓ, நான் மூர்ச்சையாகிவிட்டேனா? ஆகியிருப்பேன், ஆகியிருப்பேன்’ என்று சொல்லிக் கொண்டே ரூபாவின் பக்கம் திரும்பி, ‘உனக்கும், உனது காதலருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள், ரூபா போய் வா, அவசியம் நேரும்போது நாம் மறுபடியும்