பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 129

வேலையோ அநேகமாக முடிந்துவிட்டது; அருணா தன் அண்ணனுடன் சேர்ந்துவிட்டாள்; தற்செயலாக அவள் அடைந்த மூர்ச்சையும் தெளிந்துவிட்டது; தன்னை இனம் காட்டிக் கொள்ளாமல் தனக்கு அடுத்தாற்போல் சுந்தரிடம் ஏமாறுவதற்குத் தயாராகிக்கொண்டு இருக்கும் ரூபாவையும் அவளே வாழ்த்தியும் அனுப்பிவிட்டாள். அதற்குப் பிறகு இங்கே தனக்கு என்ன வேலை இருக்கிறது? சினிமா என்னும் பேரால் ஒரு குற்றமும் செய்யாமல் மற்றவர்கள் அனுபவிக்கும் மூன்று மணி நேரச் சிறைவாசத்தைத் தானும் ஏன் அனுபவிக்க வேண்டும்?-அதிலும், கஷ்டப்பட்டுச் சம்பாதித்த காசைக் கொடுத்து

ஏதோ ஒரு வெறி, ஏதோ ஒரு தூண்டுகோல்-இந்தக் காதலனிடமிருந்து அந்தக் காதலியைக் காக்க வேண்டுமென்று தன்னை உந்தித் தள்ளிற்று; அதற்காக ஏதோ செய்தோம்அவ்வளவுதான்

அதற்கு மேல் தன்னால் என்ன செய்யமுடியும்?இவர்களைச் சேர விடாமல் தடுக்க முடியுமா? இல்லை, சேர்த்துத்தான் வைக்க முடியுமா?-இரண்டுமே தன்னால் முடியாத காரியம்!

ஒருவேளை இவனுடைய விருப்பத்துக்கு அவள் இணங்கியிருந்தால்?-இவர்களுடைய விஷயத்தில் தான் தலையிட்டிருக்கப் போவதேயில்லை-காதலை உள்ளத்தில் வளர்ப்பதற்குப் பதிலாக வேறு எங்கோ வளர்க்கும் கழுதை களோடு கழுதைகளாக இந்தக் கழுதைகளையும் சேர்த்து விட்டுப் போயிருப்பேன்-ஆனால் நடந்தது வேறு; எனவே தானும் வேறுவிதமாக நடந்துகொள்ள நேரிட்டுவிட்டது

அதனாலென்ன, அது தன் கடமை அந்தக் கடமையை யும் பிறருக்காகத் தான் ஆற்றவில்லை; தனக்குத்தானே ஆற்றிக்கொண்ட கடமை, அது!

இதைத் தவிர இவர்கள் விஷயத்தில் வேறொன்றும் செய்ய முடியாது, தன்னால் -உலகத்தில் ஏமாறுபவர்கள்

கா.க -9