பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 காதலும்கல்யாணமும்

தெரிவித்துக் கொண்டே ரசிகர்கள் எழுந்தார்கள்; அந்த ரசிகர்களுக்குத் தன்னுடைய அனுதாபத்தை மானசீகமாகத் தெரிவித்துக் கொண்டே மணியும் எழுந்தான்!

அப்போது அவனைப் பார்த்த அருணாவுக்குத் ‘திக்’ கென்றது.அதுவரை அவர் தன் அண்ணாவுடன் அல்லவா பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்? தன்னைப்பற்றி அவர் அவனிடம் என்ன சொன்னாரோ, “என்னமோ என்றுதான்

20. காணாமற்போன காதலன்!

தான் நினைத்தது தவறு என்பதைத் தெரிந்துக்கொள்ள அருணாவுக்கு வெகுநேரம் பிடிக்கவில்லை; வெளியே வந்ததுமே அது அவளுக்குத் தெரிந்துபோயிற்று-ஆம், அவள் அவ்வாறு நினைக்கக்கூடும் என்பதை உணர்ந்த மணி, ‘என்ன அருணா, சமய சந்தர்ப்பம் தெரியாமல் நீ உன் அண்ணாவை வளைய வந்துக் கொண்டிருக்கிறாயே? பாமா உன்னை வெளிப்படையாகத் திட்டாவிட்டாலும் உள்ளுக்குள்ளாவது திட்டிக் கொண்டிருக்காதா?’ என்றான் சிரித்துக்கொண்டே.

‘'நானும் அதை நினைத்துத்தான் அவர்களை விட்டு ஒதுங்கி ஒதுங்கி நடந்துக்கொண்டிருக்கிறேன்; இருந்தாலும் இந்தத் தியேட்டருக்கு நான் வந்திருக்கக்கூடாது என்பதை இப்போதுதான் உணர்கிறேன்’ என்றாள் அவள்.

அதற்குள் பாமா குறுக்கிட்டு, “நான் ஒன்றும் உன்னைத் திட்டிக்கொண்டிருக்கவில்லை; நீ இந்தத் தியேட்டருக்கு வந்ததிலும் எனக்கு ஒன்றும் வருத்தம் கிடையாது’ என்றாள் பொய்யானக் கோபத்துடன்.

‘அதெல்லாம் சும்மா; நீ நம்பாதே, அருணா எதிர்பாராமல் ஏதோ நடந்தது நடந்துவிட்டது; இப்போதாவது நீ அவர்களை விட்டுப்பிரிந்து, வீட்டுக்குப் போய்ச் சேருவதைப் பார்!” என்றான் மணி.