பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 133

‘அப்போது மட்டும் எங்களால் நிம்மதியாக இருந்துவிட முடியுமா, என்ன? வீட்டுக்குப் போய் இவள் எங்களைப் பற்றி என்ன சொல்வாளோ, என்னமோ?” என்றான் மோகன்.

‘சொன்னால் சொல்லட்டுமே, அதனாலென்ன? நாளைக்கு நீ யாருக்கும் தெரியாமலா பாமாவைக் கல்யாணம் செய்துக் கொள்ளப் போகிறாய்?” என்றான் மணி.

இந்தச் சமயத்தில் பாமா ஏதோ முணுமுணுத்தது மணியின் காதில் விழுந்தது; ‘என்ன பாமா, என்ன சொல்கிறாய் நீ?” என்று அவன் அவளைக் கேட்டான்.

‘ஒன்றும் சொல்லவில்லை; நீங்கள் சொல்வதைத்தான் நானும் இவரிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன் என்றேன்” என்றாள் அவள்.

‘நீயும் சொன்னாயா, அதுதான் சரி வேறு எந்த விஷயத்தில் ரகசியம் இருந்தாலும் இருக்கலாம்; இந்தக் காதல் விஷயத்தில் மட்டும் ரகசியம் இருக்கவேக் கூடாது, பாமா இருந்தால் இவனுக்கு ஒன்றும் ஆபத்தில்லை; உனக்குத்தான் ஆபத்து’ என்றான் மணி, மோகனை அவளுக்குச் சுட்டிக் காட்டி.

இதை அவன் சொல்லக் கேட்டபோது, பாமாவின் நெஞ்சம் ஏனோ நெகிழ்ந்தது.இப்படிப்பட்ட ஒர் உத்தமனைப்பற்றி இவர் தன்னிடம் என்னவெல்லாம் சொன்னார்? ஒரு வேளை தங்களுக்கு இயற்கையாகவே வாய்க்கப்பெற்ற கற்பனா சக்தியால், குழந்தைகள் தாங்கள் சொல்வது பொய் என்று தெரியாமல் எதையும் மிகைப்படுத்திச் சொல்கின்றனவே, அந்தக் குழந்தைகளில் இந்தக் குழந்தையும் ஒன்றாயிருக்குமோ?-ஐயோ, என் குழந்தையே! உன்னை நான் எப்படித் திருத்தப் போகிறேனோ, தெரியவில்லையே)

இப்படி அவள் எண்ணிக்கொண்டு இருந்தபோது, ‘என்ன பாமா, என்ன யோசிக்கிறாய்? அண்ணனுக்குத்தான்