பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 காதலும்கல்யாணமும்

“அப்படியென்றால்?” ‘அவன் உங்களை மட்டும் காதலிக்கத் தயாராயில்லை, ஏமாந்தால் இந்த உலகத்திலுள்ள அத்தனைப் பெண்களை யுமே காதலிக்கத் தயாராயிருக்கிறான் என்று அர்த்தம்’

அவ்வளவுதான்; ரூபா அதற்குமேல் அங்கே நிற்கவில்லை. விடுவிடுவென்று தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டாள்

அவள் சென்ற திசையையே ஒரு கணம் பார்த்துக் கொண்டு நின்ற அருணா, ‘என்னிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் போகிறாளே?” என்றாள், மணியின் பக்கம் திரும்பி.

‘'காதலன் சொல்லிக்கொண்டுபோனால்தானே காதலி சொல்லிக் கொண்டு போக என்றான் அவன்

தன்னுடன் மணி வரவில்லையென்றாலும், தான் வீடு போய்ச் சேரும் வரை அவன் தனக்குத் தோன்றாத் துணையாயிருப்பான் என்ற உறுதி அருணாவுக்கு இருந்தது. ஆனால், அந்த உறுதி அவளுடைய நடையில் பிரதிபலித்த அளவுக்கு உள்ளத்தில் பிரதிபலிக்கவில்லை. தான் செய்த தவறு அந்தத் தோன்றாத் துணையால் தன் அண்ணாவுக்குத் தெரியாமல் இருக்கலாம்; அப்பாவுக்குத் தெரியாமல் இருக்கலாம்; அம்மாவுக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அது தனக்குத் தெரியாமல் இருக்க முடியாது அல்லவா?-அந்த தவற்றை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைத்தாலும் தனக்குத் தெரியாமல் மறைக்க முடியாது அல்லவா?-தன்னைப் பொறுத்தவரை அது என்றும் தன் இதயத்தில் விழுந்தக் கீறலாகத்தானே இருக்கும்? அதை என்னதான் ஆற்றினாலும் அதன் வடு என்றும் தன் இதயத்தில் மறையாமல்தானே இருக்கும்?

பாமா சொல்வதைப் போல், மணி அண்ணன் சொல் வதைப் போல், அவன் தன்னைப் பகிரங்கமாகக் காதலித்தி ருந்தால் இந்த அவலத்துக்கு, இந்த அவமானத்துக்குத் தான்