பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 137

உள்ளாகியிருக்க முடியாது; தனக்கு அஞ்சாவிட்டாலும் பிறருக்கு அஞ்சியாவது அவன் தன்னை இந்தப் பழிக்கு, இந்தப் பாவத்துக்கு ஆளாக்கியிருக்க முடியாது.

இந்த உலகத்தில் பிறருக்கு அஞ்சி வாழ்வதைவிட தனக்குத் தானே அஞ்சி வாழ்வதுதான் எவ்வளவு கொடுமையானது எவ்வளவு குரூரமானது

அத்தகைய கொடுமைக்கும் குரூரத்துக்கும் தன்னை ஆளாக்கிய அதே நாளில், இன்னொருத்தியையும் அதே கொடுமைக்கு, அதே குரூரத்துக்கு அந்தப் பாவி ஆளாக்கத் துணிகிறான்?-மணி அண்ணன் சொல்வதுபோல அவனுக்கு வாழ்க்கை ஒரு விளையாட்டாகத்தான் இருக்கும் போல் இருக்கிறது!

அவன் விளையாடலாம்; அவனை நம்பி ஒரு பெண் விளையாட முடியுமா?-அப்படி விளையாடினால் கடைசியில் அவள் தன் விதியுடன் அல்லவா விளையாட வேண்டியிருக்கும் நல்லவேளை, நான் பிழைத்தேன்

அன்றொரு நாள் தன்னுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ளவில்லை என்பதற்காக அவன் தன்னைப் படுத்திய பாடு கடவுள்தான் காப்பாற்றினார், தனக்கு அந்தச் சமயத்தில் அந்த நல்ல புத்தியைக் கொடுத்துஇல்லாவிட்டால் அதை வேறு வைத்துக்கொண்டு அவன் தன்னை என்ன பாடு படுத்தியிருப்பானோ?

காதல் கடிதம் மட்டும் தான் அவனுக்கு நாலோ, ஐந்தோ எழுதியிருப்பதாக ஞாபகம். அவற்றைக் கூடத் தவிர்க்க முடியாமல்தான் எழுத நேர்ந்தது. அவன் பாட்டுக்கு நூற்றுக்கணக்கில் காதல் கடிதங்கள் எழுதிக்கொண்டே இருந்தால்? நான் நாலோ, ஐந்தோகூட எழுதாமல் இருக்க முடியுமா?

அந்தக் கடிதங்களைப்பற்றிக்கூட இப்போது தான் கவலைப் படவேண்டிய அவசியமில்லை-அவன்தான் கண்ணறாவிக் காதலனாயிருக்கிறானே,அவற்றைத் தன்னைப்