பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 காதலும்கல்யாணமும்

‘அந்த ஹீட்டரின் ஹீட்டை எங்கே அனுபவிக்க

விட்டாள் என் அம்மா, அதற்குள் வந்து எழுப்பிவிட்டாளே?’ என்றான் மோகன், அழாக் குறையாக,

இந்தச் சமயத்தில் அங்கே வந்த அவன் தாயார், ‘உனக்கு ஏண்டா, ஹீட்டர் ஏதாவது ஆறிவிட்டால்தான் சுட வைத்துக் கொடுக்க நான் இருக்கிறேனே’ என்றாள் கரிசனையுடன்.

ஆம், அந்த ஹீட்ட'ரைத் தேடும் வயதை அவன் கடந்து விட்டான் என்பதைக் கூட அந்தத் தாயுள்ளம் அதுவரை அறியவில்லை!

2. காதல் மன்னன்!

இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு, ‘ஏன்தான் வருகிறதோ, இந்தத் திங்கட்கிழமை’ என்று அலுத்துக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான் மோகன். காபியும் கையுமாக வழக்கம்போல் அவனுக்கு எதிர்த்தாற்போல் வந்து நின்றாள், அவன் அம்மா.

‘இதே காபியை, இதே காலை நேரத்தில், குளித்து நனைந்த கூந்தல் கழுத்திலே விழுந்து புரள, அந்தக் கூந்தலுக்கு நடுவே கிள்ளி வைத்த ஒற்றை ரோஜா, முதல் நாள் இரவுக்குப் பிறகு வெளிறிப்போன தன் இதழ்களை நினைவூட்ட, அந்தக் ‘கனவுக் கன்னி கொண்டு வந்திருந்தால் எப்படி இருக்கும்?”

இப்படி ஒடிற்று அவன் கற்பனை, ஆனால்...

‘இவ்வளவு சூடான காபியை அந்தத் தளிர்க்கரம் ஏந்தலாமா? ஏந்தினால் அந்தக் கரம் தளிர்க்கரமாகத்தான் இருக்குமா?-கூடாது; அவள் கரம் சூடான எதையுமே ஏந்தக் கூடாது