பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. பெரிய இடத்து விவகாரம்

டாக்சி; அதிலிருந்து ஒரு கை-அப்படியே திடுக்கிட்டு நின்றுவிட்டாள் அருணா.

‘என்ன அருணா. பயந்துவிட்டாயா?’ என்றார் அவளுடைய அப்பா ஆபத்சகாயம், வண்டிக்குள்ளிருந்து சிரித்தபடி.

‘போங்கப்பா, இப்படியா திடீரென்று என் கையைப் பிடிப்பார்கள்? பேசாமல் வண்டியை நிறுத்தி ஒரு குரல் கொடுத்திருந்தால் போதாதா?”

‘போதும்தான் என்ன இருந்தாலும் போலீஸ் இலாகாவில் வேலை பார்த்தவன் பார், என்னுடைய புத்தி அப்படித்தான் போகும் அது சரி நீ இப்போதுதான் மகாபலிபுரத்திலிருந்து வருகிறாயா?”

“ஆமாம், பஸ் தவறிவிட்டது” ஏதோ ஞாபகத்தில் இப்படிச் சொல்லிவிட்ட அருணா, அடுத்தக் கணமே தவற்றை உணர்ந்து நாக்கைக் கடித்துக் கொண்டாள். அதற்குள், ‘பஸ் தவறிவிட்டதா’ என்று வியப்பினால் வாயைப் பிளந்தார் ஆபத்சகாயம்.

‘இல்லை அப்பா, பஸ் வர நேரமாகிவிட்டது என்றேன்’ என்றாள் அவள், அதற்குள் தன்னைச் சமாளித்துக் கொண்டு.

‘அதையா இவ்வளவு அழகாகச் சொல்கிறாய்? அரசாங்கக் காரியம் எதுதான் நேரத்தோடு நடக்கிறது, பஸ் நேரத்தோடு வர?’ என்றார் அவர், தானும் ஒரு முன்னாள் அரசாங்க அதிகாரிதான் என்பதை அறவே மறந்து.

அப்போது, ‘அதை ஏன் சொல்கிறீர்கள், போங்கள் சுதந்திரம் கிடைத்தாலும் கிடைத்தது, மனிதனுக்கு எதிலும் சுதந்திரம் இல்லை இப்போது; எடுத்ததற்கெல்லாம் பெர்மிட், லைசென்ஸ், கோட்டா என்று உயிரை வாங்கி