பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 காதலும்கல்யாணமும்

“எப்படி இல்லாமற் போகும்? அதே சாப்பாடு, அதேத் துணிமணி, அதேக் கார் சவாரி, அதே சுக செளகரியங்கள்...”

‘இதற்குத்தான் வெள்ளைக்காரன் டிரைவர்களுக்கென்று தனி உடுப்பு தைத்துக் கொடுத்துவிடுகிறான்’

‘நான் மட்டும் தைத்துக் கொடுக்காமலா இருக்கிறேன், தைத்துக் கொடுக்கத்தான் செய்கிறேன்! ஆனால் அவன் அதைப் போட்டால்தானே?”

‘போடாவிட்டால் நிறுத்திவிட வேண்டும்’

‘அதைத்தான் செய்தேன் நான்; அவன் என்னடா என்றால்...’

அவர் முடிக்கவில்லை; அதற்குள் கலைந்துபோன தன் ஆடை அணிகளைச் சரி செய்துகொண்டே அங்கே வந்த கீதா, ‘'நன்றாயிருக்கிறது, நீங்களும் உங்கள் டாக்சியும்! எனக்குப் போன் பண்ணியிருந்தால் கூட நான் உங்களுக்கு வண்டி அனுப்பியிருப்பேனே?’ என்றாள் அவருடைய அந்தஸ்தை அவருக்கு ஞாபகப்படுத்தி அந்த அந்தஸ்தைக் கொண்டே தன் அயோக்கியத்தனத்தையும் மறைத்துக் கொள்வதற்காக!

அவரோ அவள் எதிர்பார்த்ததற்கு நேர்விரோதமாக, “அது சரி, அந்த வேணு ஏன் இங்கே வந்தான் இப்போது?” என்றார் அவளை ஊடுருவிப் பார்த்தபடி.

‘'வேலை வேண்டுமென்று வந்தான் வேறு ஆள் வைத்தாய்விட்டது. போய் (} I என்றேன்; போய்விட்டான்’

‘'வேலை கேட்க வந்தவனா கதவை உள்ளே தாளிட்டுக் கொண்டு வந்துக் கேட்டான்?”

‘கதவை உள்ளேத் தாளிட்டுக்கொண்டு இருந்தானா! அதை நான் பார்க்கவேயில்லையே? அவன் வரும்போது நான் டிரஸ்ஸிங் ரூ'மில் இருந்தேன்!"