பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 13

அம்மா இருக்கும் வரை அம்மா ஏந்தட்டும்; அவளுக்குப் பிறகு ஒரு சமையற்காரனைப் போட்டுவிட்டால் போகிறது...

முதல் காபி அவனுடையதாயிருந்தாலும் அடுத்த காபியாவது தன்னுடையதாயிருக்காதா?

இருக்கும்; என்ன இருந்தாலும் அவள் கரம் ஏந்தும் காபிக்கு ஈடாக இருக்குமா அவன் கரம் ஏந்தும் காபி?...’

அவனுடைய கற்பனைக் குதிரை நிற்கவில்லை; அதற்குள், ‘என்னடா, நான் பாட்டுக்கு நிற்கிறேன்; நீ பாட்டுக்கு ஏதோ யோசித்துக் கொண்டு இருக்கிறாயே?” என்றாள் அவன் அம்மா, பொறுமையிழந்து. “ஒன்றுமில்லை அம்மா, ஒன்றுமில்லை’ என்று அவள் கையிலிருந்த காபியை வேண்டா வெறுப்பாக வாங்கிக் குடித்துவிட்டு “சேவிங் செட் டும் கையுமாகக் கண்ணாடிக்கு முன்னால் போய் நின்றான், அவன்.

அங்கேயும் அவனுடைய பிரதிபிம்பத்துக்குப் பதிலாக அவளுடைய பிரதிபிம்பமா தெரிய வேண்டும்?

ஒரு வேளை... இல்லாதது எதுவும், இல்லாதவர்கள் யாரும் கனவில் வருவதில்லை என்கிறார்களே, அது உண்மையா யிருக்குமோ? அப்படி ஒருத்தி இருந்து, இப்போது அவள் எனக்குப் பின்னால் வந்து நிற்கிறாளோ?

திரும்பிப் பார்த்தான்; யாரையும் காணோம்! எல்லாரும் தூங்கிக் கொண்டே கனவு கண்டால் நான் விழித்துக் கொண்டே கனவு காண்கிறேனா, என்ன மோசம்? ரொம்ப மோசம்!”

இப்படித் தன்னைத் தானே கடிந்துகொண்ட வண்ணம் அவன் முகத்தை வழித்துக்கொண்டு திரும்பிய போது, “ஏன் அண்ணா இந்தச் சனியும் ஞாயிறும் வாரத்துக்கு ஒரு முறைதான் வருமா?’ என்று கேட்டுக் கொண்டே வந்தாள்

அருணா.