பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 149

அருணா காட்டிய திசையில் ஆபத்சகாயத்தின் பார்வை சென்றது-அங்கே மதிற்கவருக்கு அப்பால் வேணு நின்று கொண்டிருந்தான்; அவசரத்தில் மறந்து வைத்துவிட்டுப் போன அவன் சட்டை வேட்டியை எடுத்து அவனிடம் கொடுத்துக்கொண்டிருந்தாள் கீதா

‘இப்படியும் நடப்பதுண்டா இங்கே?’ என்றாள் அருணா வியப்புடன்.

‘ஸ், பேசாதே! அதெல்லாம் பெரிய இடத்து விவ காரம்’ என்று அவள் வாயைப் பொத்தினார் ஆபத்சகாயம்

22. அருணா பெற்ற அனுபவம்

பெரிய இடத்து விவகாரம்1-அதைப்பற்றிப்பேசக் கூடாது பேசினால் பண்புக் குறைவு!

அசிங்கத்தை எவ்வளவு அழகானத் திரையிட்டு மறைக்கிறார்கள், இவர்கள் உண்மையில் இவர்கள் நேசிப்பதுப் பண்பையா, பணத்தையா?

இப்படிப் பேசும் இவர்கள் எங்கே போய்க்கொண்டிருக் கிறார்கள்? இல்லை, தாங்கள் அங்கம் வகிக்கும் சமூகத்தைத்தான் எங்கேத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்? சமுத்திரத்திலா, சாக்கடையிலா?

அருவருக்கத் தக்க இவர்களுடன் தொடர்பு கொண்டிருக்கும் இந்த அப்பாவுக்குத்தானா பெண்ணாய்ப் பிறந்திருக்கிறேன், நான்? மாசு படிந்த இவருடைய மடியில்தானா இத்தனை நாளும் வளர்ந்திருக்கிறேன், நான்?-வெட்கக் கேடு!

தொடர்பென்றால் அந்தத் தொடர்பும் இன்று நேற்றுக் கொண்டத் தொடர்பாகவா இருக்கிறது?-இல்லையே, எத்தனையோ வருடங்களாகக் கொண்டத் தொடர்பாக வல்லவா இருக்கிறது?