பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 151

இந்த லட்சணத்தில் வாசலில் ஒரு கூர்க்கா; அவனுக்கு ஒரு காங்கிரீட் குடை-எல்லாம் ஒரே வேடிக்கைதான், போ! அந்த வேடிக்கைகளில் ஒன்று அவர் டாக்சியில் வந்தார் என்பதற்காக அவள் கோபித்துக்கொள்வது!-கோபித்துக் கொள்வதாவது, அதில் ஒரு பெருமை அவளுக்கு அதாவது, ‘நாங்கள் ஒன்றும் ஒரு காரோடு இல்லை; ஒன்று கெட்டால் இன்னொன்று இருக்கிறதாக்கும் எங்களுக்கு என்று அவள் சொல்லாமல் சொல்கிறாள்!

போகட்டும்; வேறு எந்தப் பெருமை இல்லாவிட்டாலும் அந்த ஒரு பெருமையாவது அவர்களுக்கு இருக்க வேண்டாமா?-இருந்துவிட்டுப் போகட்டும்!

ஆனால், கார்களில் ஒன்று கெட்டால் இன்னொன்று இருப்பது சரி; காதலர்களிலும் ஒருவன் கெட்டால் இன்னொருவன் இருக்கலாமா?-ஒருவேளை இதுவும் அவர்களுடைய பெருமைகளில் ஒன்றாயிருக்குமோ?இருந்தாலும் இருக்கும்!

இருப்பவர்களுக்கு அந்தப் பெருமை தெரியும்; அந்தப் பெருமையின் அருமையும் தெரியும். இல்லாதவர்களுக்கு அந்தப் பெருமை எங்கே தெரியப் போகிறது? அந்தப் பெருமையின் அருமைதான் எங்கே தெரியப் போகிறது?

ஐநூறு ரூபா ஒரு பொருட்டாகப் படவில்லை அவளுக்கு; அது ஒரு குறையாகப் படவில்லை அவருக்குஅந்த அளவுக்குப் பணத் திமிர் பிடித்த அவருக்குத்தான் பெர்மிட் வேண்டாமாம்; லைசென்ஸ் வேண்டாமாம்; கோட்டா வேண்டாமாம்!-அவையெல்லாம் இருக்கும்போதே இந்த நிலை என்றால் இல்லாவிட்டால் இன்னும் என்ன நிலையில் இருப்பாரோ?

இப்படிப்பட்ட உத்தமோத்தமர்களைச் சட்ட திட்டங் களால் மாற்ற முயல்வது தவறு, தார்மீக ஆன்மீக உபதேசங்களால் மாற்ற முயலவேண்டும் என்று சிலர் சொல்கிறார்களே, அவர்களை என்ன செய்தால் தேவலை?