பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 155

ஆம், அவர் இவரைக் கவனிப்பதில்லைதான்!-காரணம், இவர் பதவியில் இருந்தபோது இவருடைய உதவி அவருக்குத் தேவையாயிருந்தது; இல்லாதபோது தேவை யில்லாமற் போய் விட்டது!-உண்மை இதுதான் என்றாலும் இதைச் சொல்லவில்லை அவர், சொன்னால் அன்புக்கும் குறைவு, பண்புக்கும் குறைவு என்று இப்படிச் சொன்னார்:

“கவனிக்காமலென்ன, நான் சென்னையில் இருப்பதோ மாதத்தில் நாலைந்து நாட்கள், அந்த நாலைந்து நாட்களில் நான் எத்தனையோ வேலைகளைக் கவனித்தாக வேண்டியிருக்கிறது!’

‘எனக்குத் தெரியாதா. நேரமில்லாமல்தான் நீங்கள் என்னைக் கவனிக்கவில்லையென்று!”

‘அப்புறம் என்ன, எல்லாம் தெரிந்த உங்களுக்கு நான் சொல்ல என்ன இருக்கிறது?”

இப்படியாக அவர்கள் இருவரும் பெரிய மனிதர்களின் வழக்கத்தையொட்டி, மணமறிந்த பொய்களால் ஒருவரை யொருவர் ஏமாற்றிக்கொண்டு விஸ்கியில் சோடாவைக் கலந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, கீதா வந்து தயக்கத்துடன் நின்றாள்.

“என்ன?’ என்றார் சுகானந்தம். ‘ஒன்றுமில்லை. மேயருக்குப் பொழுது போகவில்லை யாம்; தானும் வரலாமா, உங்களுடன் பொழுது போக்க என்று போனில் கேட்கிறார்!’ என்றாள் அவள், சிரித்துக் கொண்டே.

இதைக் கேட்டதும், ‘அவன் ஒருவன் ஒசிக் குடி யென்றால் உயிரையே விட்டுவிடுகிறான்!” என்றார் சுகானந்தம் எரிச்சலுடன்.

‘ஊற்றி வையுங்கள்; அவனாலும் உங்களுக்கு ஏதாவது காரியம் நடக்கலாம்!’ என்றார் ஆபத்சகாயம்.

‘சரி, வரச் சொல்!’ என்றார் அவர்; அவள் போய் விட்டாள்.