பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 காதலும் கல்யாணமும்

‘உனக்காவது வாரத்துக்கு ஒரு முறை வருகிறது; எனக்கு மாதத்துக்கு ஒரு முறைதானே வருகிறது?” என்றான் மோகன், வருத்தத்துடன்.

Tெதிர்பாராத நிகழ்ச்சிகள் கதைகளில் நிகழும் என்பதில்லை; வாழ்க்கையிலும் சில சமயம் நிகழ்வதுண்டு. அன்றுவரை அதை நம்பாத மோகன், அன்று நம்ப வேண்டியதாயிற்று. ஆம், அவன் வேலை செய்யும் அலுவலகத்திலே அவனுக்கு முன்னால் வந்து காத்திருந்தாள், அவன் கனவுக் கன்னி

அதே சாயல்; அதே அலங்காரம்-ஆனால் குதிரை வால் கொண்டைக்குப் பதில் பின்னல்; போலிப் பூக்களுக்குப் பதில் உண்மைப் பூ; அதே உடை, அதே நடை-ஆனால் கறுப்புக் கண்ணாடி கண்களில் இல்லை; கையிலே இருந்தது

அதனால் என்ன, அந்தக் கண்ணாடிக்குப் பின்னாலிருந்த அவள் விழிகள் உண்மையிலேயே கயல்விழிகள்தான் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் இப்போது தெரிந்து விட்டதே?

ஆச்சரியம் ஒரு பக்கம், ஆனந்தம் இன்னொரு பக்கம்-இந்த இரண்டு உணர்ச்சிகளாலும் உந்தித் தள்ளப்பட்ட அவன் தன்னை மறந்து அவளை நெருங்கினான்; நெருங்கியதோடு நில்லாமல், “நீங்கள்...’ என்று ஏதோ கேட்க ஆரம்பித்தவன், அதற்குமேல் கேட்க முடியாமல் திணறினான்.

‘என்ன வேண்டும், உங்களுக்கு ‘ என்றாள் அவள் அவன் திணறினாலும் தான் திணறாமல் நின்று

‘ஒன்றும் வேண்டாம்; உண்மையாகவே நீங்கள் பெண்ணா? இல்லை...’

அவ்வளவுதான்: “எப்படித் தோன்றுகிறது, உங்களுக்கு? பெண்ணாகத் தோன்றுகிறதா இல்லை, பேயாகத் தோன்றுகிறதா என்று இரைந்தாள், அவள்