பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 167

அந்தக் கடமைக்கும் கட்டுப்பாட்டுக்கும் தன் தாயார் உரியவள்தான் என்பதில் அவனுக்குச் சந்தேகமில்லை; ஆனால், தந்தை உரியவர்தானா?-அதுவும் சந்தேகமாய்த்தான் இருந்தது அவனுக்கு.

காரணம், மேல் வர்க்கத்தாரைப் போல் வாழ நினைத்து மானத்தையும் மரியாதையையும் கூடப் பணயமாக வைத்து விடுவதில்லையா, மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த சிலர். அவர்களில் ஒருவராக அவரும் இருந்ததுதான்!

அதனாலேயே பதவியில் இருந்தபோதுக் கூட அவர் நாணயமாக வாழவில்லை. நாணயமாக வாழவில்லை யென்றால், அவருக்கு இருந்த ஆசைகள் அவரை நாணயமாக வாழ விடவில்லை!-இல்லாவிட்டால் அவர்கள் சொந்தப் பங்களாவில் வாசம் செய்கிறார்கள் என்பதற்காக இவரும் வாடகைப் பங்களாவில் வாசம் செய்து, நூறும் இருநூறுமாக வாடகை கொட்டிக் கொடுத்திருக்க மாட்டார்; அவர்கள் சொந்தக் காரில் போகிறார்கள் என்பதற்காக இவரும் வாடகைக் காரிலாவது சவாரி செய்ய வேண்டுமென்று நினைத்து, போக்குவரத்துச் செலவைக் கூட்டிக்கொண்டிருக்க மாட்டார்; அவர்கள் எடுத்ததற்கெல்லாம் வேலைக்காரர்கள் வைத்துக் கொள்கிறார்கள் என்பதற்காக, இவரும் எடுத்ததற்கெல்லாம் வேலைக்காரர்களை வைத்துக்கொண்டு, சம்பளத்தோடு சாப்பாடும் போட்டுக்கொண்டு இருந்திருக்க மாட்டார்; அவர்கள் அடிக்கடி உடை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதற்காக, இவரும் அடிக்கடி உடை மாற்றி அனாவசியமாகச் சலவைச் செலவை அதிகப்படுத்திக் கொண்டிருந்திருக்க மாட்டார்; அவர்கள் வைர மோதிரம் அணிகிறார்கள் என்பதற்காக இவரும் கடன் வாங்கியாவது வைர மோதிரம் அணிந்திருக்க மாட்டார்; அவர்கள் தங்களுடைய குழந்தைகளைக் ‘கான்வெண்ட்"டில் படிக்க வைக்கிறார்கள் என்பதற்காக, இவரும் தன் குழந்தைகளைக் ‘கான்வெண்ட்'டில் படிக்க வைத்து, அவர்களுக்கென்று மாதச் சம்பளத்தில் ஒர் ரிக்ஷாக்காரனையும் அமர்த்தியிருக்க