பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 15

‘கோபித்துக் கொள்ளாதீர்கள் நேற்றிரவு உங்களைப் போலவே ஒருத்தி...’

& ot

என்ன, மேலும் மேலும் உளறிக் கொண்டே இருக்கிறீர்கள்? உங்களைப் போலவே’ என்பதற்கும், ‘ஒருத்தி என்பதற்கும் உள்ள வித்தியாசம் கூடவா தெரியவில்லை, உங்களுக்கு?”

“மன்னிக்க வேண்டும். உங்களுக்கு மட்டும் மரியாதை கொடுத்தால் போதும் என்று நினைத்தேன் நான்; நீங்களோ உங்களைப் போலவே உள்ள இன்னொருத்திக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்கிறீர்கள்...’

அவன் முடிக்கவில்லை; அதற்குள், ‘வெறுமனே மன்னிக்க வேண்டும் என்று சொன்னால் போதுமாடா, கன்னத்திலும் போட்டுக் கொள்’ என்று அவனுக்குப் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது. மோகன் திரும்பிப் பார்த்தான்; மணி வந்துக் கொண்டிருந்தான்.

‘இந்தச் சமயத்தில்தானா இவன் வந்துத் தொலைய வேண்டும்? என்று நினைத்த மோகன், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், ‘ஏண்டா, மணி இவரைத் தெரியுமா, உனக்கு?’ என்று சம்பந்தமில்லாமல் கேட்டு வைத்து, அப்போதைய நிலைமையை எப்படியாவது சமாளிக்கப் பார்த்தான்!

அவனா அதற்கெல்லாம் விட்டுக் கொடுப்பவன்?'எனக்கு அவரைத் தெரியவும் தெரியாது; தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் கிடையாது’ என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டுமாகச் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டான்

‘அவள் மூக்கை உடைத்தாள், இவன் இடுப்பை ஒடிக்கிறானே, பாவி என்று உள்ளுறத் திட்டிக் கொண்டே அவன் மறுபடியும் அந்தக் கனவுக் கன்னியை நோக்கித் திரும்பிய போது, அவள் இருந்த இடத்தில் அவளைக் காணோம்1-அதற்குள் எங்கே போயிருப்பாள்? - முகத்தில்