பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 169

மிரட்டு மிரட்டினால் போதும்; ஐயோ, வேண்டாண்டா! நீ அந்தப் பாமாவையே கல்யாணம் செய்துக்கொள்!” என்று அவள் சொல்லிவிடுவாள்!-ஆனால் அப்பா?-'இருட்டில் தண்டவாளம் தெரியாமல் போய்விடப் போகிறது, எதற்கும் டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு போ’ என்றல்லவா சொல்வார்?-அதை நினைக்கத்தான் என்னவோ போலிருந்தது அவனுக்கு.

ஆனால், அதற்காகத் தன் தந்தையை ஒரேயடியாக எதிர்த்து நிற்கவும் அவன் தயாராயில்லை. ஏனெனில், அவருடைய தவறான நடத்தைக்குக் காரணம் அவர் மட்டு மல்ல; அவரைத் தன் அங்கமாகக் கொண்ட சமூக அமைப்பும் அதற்கு ஒரளவுக் காரணம் என்பதை அவன் அறிந்திருந்தான்.

அவரைப் பொறுத்தவரை அவர் பாமாவை விரும்பி னாலும் விரும்புவாரேத் தவிர, அவளுடைய அக்காவை ஒருநாளும் விரும்ப மாட்டார். அப்படி ஒருத்தி இருக்கிறாள் என்று அவருக்குத் தெரிந்தாலே போதும், போச்சு, போச்சு என் மானம் போச்சு, மரியாதை போச்சு என்று குதியாய்க் குதிக்க ஆரம்பித்துவிடுவார். உண்மையான மானம், உண்மையான மரியாதை எங்கே இருக்கிறது, எதில் இருக்கிறது என்பதை அறியாமல்; அறிந்தும் அதைப் பொருட்படுத்தாமல்

வெளிச்சமென்றால் அது உள்ளேயும் இருக்க வேண்டும் வெளியேயும் இருக்க வேண்டும். அப்பாவைப் போன்றவர்கள் என்னடாவென்றால் உள்ளே இருள் படர்ந்தாலும் பரவாயில்லை, வெளியே வெளிச்சம் இருக்கட்டும் என்றல்லவா சொல்கிறார்கள்?

அதற்கேற்றாற்போல், ஆசையை அடக்கு, ஆசையை அடக்கு என்று அல்லும் பகலும் அனுவரதமும் மக்களுக்கு உபதேசம் செய்துகொண்டிருக்கிறார்களே, அந்த மகான்களுக்குக் கூட ஆசை வேண்டியிருக்கிறது, வெளிச்சம்