பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 173

‘அப்படி என்ன உல்லாசப் பிரயாணம் வேண்டி யிருக்கிறதாம், இப்படி உடம்பைக் கெடுத்துக்கொண்டு!” என்று சொல்லிக்கொண்டே அன்னபூரணியம்மாள் வெளியே வந்தாள்.

அப்போது அருணா விம்மும் சத்தம் கேட்கவே, “என்னம்மா, ஏன் அழுகிறாய்?” என்று பதறிக்கொண்டே திரும்பினாள் அவள்.

அவ்வளவுதான்; அவளுடைய விம்மல் வெடித்து அழுகை பீறிட்டுக்கொண்டு வந்துவிட்டது. அதை அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டே, ‘ஏன் அழுகிறேன் என்றா கேட்கிறாய்? போயும் போயும் இந்த வீட்டில் வந்து நான் பெண்ணாய்ப் பிறந்தேனே, அதற்காகத்தான் அம்மா அழுகிறேன்’ என்றாள் அவள்.

‘ஏன், என்ன நடந்தது?” ‘அதை நினைக்க மனம் கூசுகிறது; சொல்ல வாய் கூசுகிறது’

‘பரவாயில்லை, சொல்? வேறு யாரிடம் சொல்லப் போகிறாய், உன் அம்மாவிடம்தானே சொல்லப்போகிறாய்?” “அதைச் சொல்வதற்கு முன்னால் உன்னை நான் ஒன்று கேட்கலாமா, அம்மா? கேட்டால் கோபித்துக்கொள்ள மாட்டாயே?”

‘நான் ஒன்றும் கோபித்துக்கொள்ள மாட்டேன்; சும்மாக் கேள்? :

‘அப்பாவை உனக்குப் பிடிக்கிறதா, அம்மா?” ‘இது என்ன கேள்வி,பிடிக்காமலா உன்னையும் உன் அண்ணனையும் பெற்று வளர்த்திருக்கிறேன்?”

‘போம்மா, இன்னும் நீ எனக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்துக்கொண்டிருக்கிறாயா? பிள்ளைப் பெற்று வளர்ப்பதாலேயே ஒரு கணவன் தன் மனைவிக்குப் பிடித்தவனாகிவிட மாட்டான், அம்மா!'