பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 175

‘சரிதான், இதற்கு முன்னாலேயே அந்தப் பழக்கமும் உண்டா, அவருக்கு?’ என்றாள் அருணா.

அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கவே, “அதோ, அவரும் வந்துவிட்டார்!” என்று சொல்லிக்கொண்டே, அன்னபூரணி வெளியே வந்தாள்.

ஆனால், வந்தது அவள் எதிர்பார்த்த வாடகைக் கார் அல்ல சொந்தக் கார், அந்தக் காருக்கு உரியவர் போல் தோன்றிய ஒருவர் உள்ளே உட்கார்ந்தபடியே அதன் கதவைத் திறந்துவிட, ஆபத்சகாயம் தட்டுத் தடுமாறிக் கீழே இறங்கி, ‘குழ்ட் நைழ்ட்’ என்றுக் குழறினார்; பதிலுக்கு அவரும் குழறினார், ‘குழ்ட் நைழ்ட்!” என்று

‘வரட்டுமா?’ என்றார் இவர்; ‘வாருங்கள், நான் சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கட்டும்!” என்றார் அவர்.

‘நீங்கள் ஒன்று; உங்களுடன் சம்பந்தம் செய்துக் கொள்ள நான் கொடுத்து வைத்திருக்க வேண்டாமா?” என்றார் இவர்; “நீர் கொடுத்து வைத்திருந்தால் போதுமா, ஐயா? உம்முடைய மகள் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!’ என்றார் அவர்,

‘அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம்; நான் கவனித்துக் கொள்கிறேன், அவளை என்றார் இவர்;

‘அது தெரியாதா, எனக்கு? அந்தக் காலத்தில் நீர் எத்தனை குற்றவாளிகளை நிரபராதிகளாக்கியிருக்கிறீர்; எத்தனை நிரபராதிகளைக் குற்றவாளிகளாக்கியிருக்கிறீர்! அப்படிப்பட்ட உமக்கு நான் சொல்ல என்ன இருக்கிறது?” என்றார் அவர்.

‘ஏதோ உங்களைப் போன்ற பெரிய மனிதர்களுக்காக என்னால் முடிந்ததைச் செய்தேன்; அவ்வளவுதானே?” என்றார் இவர், தன்னடக்கத்துடன்; ‘உம்மைப் போன்றவர்கள் விருப்பம்போல் வாழமுடியாதே, இந்த உலகத்தில்!” என்றார் அவர், நன்றியுணர்ச்சியுடன்.