பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 காதலும் கல்யாணமும்

கேள்விக் குறியுடன் அவன் தன் அலுவலகத்தை மூன்று முறை சுற்றிவந்த போது, “பியூன் பிச்சையா'வுக்கு என்ன தோன்றிற்றோ என்னமோ, ‘ஏதாவது ஒரு கோயிலைச் சுற்றினாலும் போகிற வழிக்குப் புண்ணியமுண்டு; ஆபீசை ஏன் சார், அனாவசியமாகச் சுற்றுகிறீர்கள்?’ என்றான்.

அதுதான் சமயமென்று நினைத்த மோகன், ‘அதிருக்கட்டும்; கையில் கறுப்புக் கண்ணாடியுடன் இங்கே ஒருத்தி நின்றுகொண்டு இருந்தாளே, அவளை நீ பார்த்தாயா?” என்று அவனையே விசாரித்தான், அதன் விளைவைப் பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்று

‘பாமா அம்மாவைச் சொல்கிறீர்களா? பரந்தாமன் ஐயா அறையிலே இருக்கிறார்கள்’ என்றான் அவன், தனக்கு எதிர்த்தாற் போலிருந்த ஓர் அதிகாரியின் அறையைச் சுட்டிக் காட்டி.

‘அவர்கள் ஏன் இங்கே வந்திருக்கிறார்கள் என்று தெரியுமா, உனக்கு?”

‘தெரியுமே, இனிமேல் அவர்கள் இங்கேதான் வேலை பார்க்கப் போகிறார்கள்!” ‘உண்மையாகவா?” “ஆமாம் சார், ஆமாம்.’ அவ்வளவுதான்; ஐயோடா என்று கத்திக் கொண்டே அரை டிக்கெட்டுகளைப் போல அவனைச் சுற்றிச் சுற்றி வந்து ‘கும்மாளம் அடிக்க வேண்டும் போல் தோன்றிற்று அவனுக்கு இருந்தாலும் அதை ஒருவாறு அடக்கிக் கொண்டு, தன் இடத்துக்குப் போய் உட்கார்ந்தான்.

சிறிது நேரத்துக்கெல்லாம் மல்லிகைப் பூ மணம் ‘கட்டியம்’ கூற, அந்தக் கட்டியத்தைத் தொடர்ந்து, ‘இங்கே வரும் பெண்களைப் பார்த்தால் வேலைக்கு வருபவர்களைப் போலவா தோன்றுகிறது, கல்யாணத்துக்கு வருபவர்களைப் போல் அல்லவா தோன்றுகிறது’ என்று யாரோ ஒரு ‘கிழட்டுப் பயல்’ உரிய வயதைக் கடந்துவிட்ட