பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 179

கிடத்துங்கள்; நான் போய் டாக்டரை அழைத்துக் கொண்டு வருகிறேன்!” என்று மோகன் திரும்பினான்.

‘படு புத்திசாலிதான், போ! டாக்டர் எதற்கு, போலீசுக்குப் போன் செய்வதற்கா?’ என்றாள் அருணா.

‘அதுவும் கவனிக்க வேண்டிய விஷயந்தான்; தெரிந்த டாக்டர்கள் யாரையாவது...”

அவன் முடிக்கவில்லை; அதற்குள், ‘அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். அவரை அப்படியே தூங்க விடுங்கள்; பொழுது விடிந்ததும் எல்லாம் சரியாய்ப் போய்விடும்!” என்று யாரோ சொல்வது அவர்கள் காதில் விழுந்தது -எல்லோரும் ஏக காலத்தில் திரும்பிப் பார்த்தனர்; வாயிற்படியின்மேல் ஒரு காலும், சைக்கிள் பெடலின் மேல் இன்னொரு காலுமாக நின்றுக்கொண்டிருந்த மணி, “நான் வரட்டுமா?’ என்றான், அதற்கு மேல் அங்கே நிற்க விரும்பாமல்.

‘எங்கே வந்தாய், எங்கே போகிறாய் ‘ என்றான் மோகன்.

‘'நான் வருவதற்கும் போவதற்கும் ஏதாவது காரண காரியம் உண்டா என்ன? அப்படியே இருந்தாலும் நானே அவற்றைப் பற்றி இனிமேல்தான் யோசித்துத் தெரிந்துக் கொள்ளவேண்டும்; நான் வருகிறேன்!’ என்று சொல்லி விட்டு நகர்ந்தான் மணி.

அவன் தலை மறைந்ததும், ‘உலகத்தின் ஒன்பதாவது அதிசயம் இது’ என்றான் மோகன்.

அந்த ‘அதிசயம் தன்னைப் பார்த்துவிட்டுப் போவதற்காகத்தான் இந்த நேரத்தில் இங்கே வந்திருக்க வேண்டும் என்பதை ஊகித்தறிந்துக்கொண்ட அருணா, “இருக்கட்டும் அண்ணா, அது இந்த உலகத்தின் ஒன்பதாவது அதிசயமாகவே இருக்கட்டும்’ என்றாள், எதையோ நினைத்துப் பெருமூச்சு விட்டபடி,