பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 183

அவரோ, ‘இவளை இப்படியே விட்டுக்கொண்டு போகக் கூடாது, மோகன் நேற்றுத்தான் அந்தப் பெரிய மனிதரிடம் இவள் மரியாதை தெரியாமல் நடந்துகொண்டாள் என்றால், இன்று என்னிடமுமல்லவா மரியாதை தெரியாமல் நடந்து கொள்கிறாள்?’ என்றார் அப்பொழுதும் விடாமல்.

அவளும் விட்டுக் கொடுக்கவில்லை; ‘முதலில் மரியாதை என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளுங்கள்; அதற்குப் பிறகு மரியாதையைப் பற்றிப் பேசுங்கள்’ என்றாள் சுடச் சுட.

அவ்வளவுதான்; அவள் கன்னத்தில் ‘பளார்’ என்று ஒர் அறை விழுந்தது. அதைத் தொடர்ந்து, “அவ்வளவு தூரத்துக்கு வந்துவிட்டாயா, நீ9 ஜாக்கிரதை யாரிடம் என்ன பேசுகிறோம் என்று தெரிந்து பேசு; தெரியாமல் பேசாதே! பேசினால் இந்த வீட்டில் எனக்கு நீ மகளாகவும் இருக்க முடியாது; உனக்கு நான் அப்பாவாகவும் இருக்க முடியாது’ என்று ஒரு துள்ளுத் துள்ளி நின்றார் அவர்.

‘ரொம்ப அழகாய்த்தான் இருக்கிறது அடித்து அடக்கக் கூடிய வயதா அவளுக்கு, இப்போது? வாருங்கள் இப்படி!’ என்று அவருடையக் கையைப் பற்றி இழுத்தாள் அன்னபூரணி. ‘அடித்து அடக்காமல் சர்க்கஸ் வித்தை காட்டியா அடக்குவார்கள், அவளை? அதுதான் முடியாது, என்னால்! ஆடிக் கறக்கிற மாட்டை நான் ஆடித்தான் கறப்பேன்; பாடிக் கறக்கிற மாட்டை நான் பாடித்தான் கறப்பேன்’ என்றார் அவர்.

மோகன் சும்மா இருக்கக் கூடாதா?-'என்ன செய்தால் என்ன, அப்பா? கறக்கிற மாடுதான் கறக்கும்; கறக்காத மாடு ஒரு நாளும் கறக்காது!’ என்றான் மெல்ல.

‘என்னடா, நீ கூடப் பொடி வைத்துப் பேசுகிறாய்!’ என்றார் அவர், அவன் பக்கம் திரும்பி.

‘'நானா பேசுகிறேன், நீங்கள் அப்படிப் பேச வைக்கிறீர் கள், என்னை பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காக நாம்