பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 காதலும் கல்யாணமும்

சிரிக்க இடம் கொடுத்துவிடக் கூடாது, அப்பா’ என்றான் அவனும் பொறுமை இழந்து.

‘யார் இப்போது சிரிக்க இடம் கொடுக்கிறார்கள்?” ‘நீங்கள்தான் ஏற்கெனவே ஒரிரு திருட்டுப் பயல்கள் இங்கே வந்துபோவதே எனக்கு என்னவோ போலிருக்கிறது; அது போதாதென்று நேற்று யாரோ ஒரு கிழட்டுப் பயலை இவளுடன் விளையாட விட்டு நீங்கள் வேடிக்கை பார்த்தீர் களாமே, இதெல்லாம் நன்றாயிருக்கிறதா உங்களுக்கு?”

‘யார் சொன்னது, அவரைக் கிழட்டுப் பயல் என்று? நாலும் தெரிந்த நாற்பத்தெட்டு வயது வாலிபரடா, அவர் அவருக்குத்தான் இவளை நான் கல்யாணம் செய்து கொடுக்கப் போகிறேனாக்கும்?”

அதுவரை தனது கன்னத்தைத் தேய்த்தபடி விசும்பிக் கொண்டிருந்த அருணா, “எத்தனையாவது மனைவியாக என்று கேள், அண்ணா!’ என்றாள் அவன் பக்கம் திரும்பி.

அவன் கேட்பதற்குள் அவரே குறுக்கிட்டு, ‘ஆயிரம் துணைவிகள் இருந்தாலும் அவருக்கு இருப்பது ஒரே ஒரு மனைவிதான் அவளையும் இவளுக்காக அவர் விவாகரத்து செய்துவிடுவதாகச் சொல்லிவிட்டார். அப்புறம் என்ன? நமக்கு வேண்டியது அவருடைய சம்பந்தம், அந்தச் சம்பந்தத்தின் மூலமாக இந்தத் தரித்திரம் பிடித்த வாழ்க்கையிலிருந்து நமக்கு விடுதலை அவ்வளவுதானே?” என்றார், அலட்சியமாக

‘குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு என்பார்கள்; உங்கள் பேச்சு பொழுது விடிந்தாலும் போகாது போலிருக்கிறது’ என்றாள் அன்னபூரணி, அடுத்த அறை தன் கன்னத்தில் விழுந்தாலும் விழட்டும் என்றுத் துணிந்து

‘யாரைக் குடிகாரன் என்கிறாய்? நாலனாவுக்கு கள் வாங்கி நடுத்தெருவில் உட்கார்ந்துக் குடிக்கிறானே, அவனைப் போய்க் குடிகாரன் என்று சொல்1 நாங்களெல்லாம் ஒரு ராஜகுடும்பம் எப்படிக் குடிக்குமோ,