பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 187

அதில் ஒரு கெளரவம் இருப்பதாகக் கூட அவள் அப்போது நினைத்தாள். அதற்குக் காரணம் அவளுக்குத் தெரிந்த சில பெண்கள், தாங்கள் உயிர் வாழ்வதற்காகத் தங்கள் உடலையே விலை கூறிக் கொண்டிருந்ததுதான்!

உழைப்பின்றி ஊதியம் தரும் அந்தத் தொழிலை அவள் இழிவென்று கருதினாலும் சம்பந்தப்பட்டவர்கள் அதை இழிவென்று கருதாதது அவளுக்கு ஆச்சரியமாயிருந்தது. அதையே பின்னால் ‘நாடகம்’ என்ற பேராலும், “சினிமா என்ற பேராலும், அவர்கள் “கலை"யாக்கி, சமூகத்தின் பாராட்டுதலைப் பெற்றபோது, அவளுடைய ஆச்சரியம் இரு மடங்கு ஆகியது. ஆயினும் சமூகத்தைப் பிடித்த பைத்தியம் அவளைப் பிடிக்கவில்லை. அதாவது, அவர்களை யார் பாராட்டினாலும் அவள் பாராட்டத் தயாராயில்லை.

இத்தனைக்கும் அந்தக் கலையையும், கலைச் செல்வங்களையும் கட்டிக் காத்து வளர்க்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பல பிரமுகர்கள் அவ்வப்போது பேசியதை அவளும் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள். எனினும், அதைக் கேட்கும் போதெல்லாம் எந்தக் கலையை இவர்கள் வளர்க்கச் சொல்கிறார்கள்?’ என்று அவளுக்குச் சிரிக்கத்தான் தோன்றுமே தவிர, மற்றவர்களைப் போல் கை தட்டத் தோன்றாது

செந்தாமரை வேண்டுமானால் சேற்றிலிருந்து முளைக்கட்டும்; சிவனாரும் அதைச் சிரமேற் கொள்ளட்டும். அதற்காகக் கலை, விபசாரத்திலிருந்தா கிளைப்பது? சமூகம் அதைத் தலை மேற்கொண்டா கூத்தாடுவது? இப்படி நினைத்தாள் அவள்

இந்த நினைப்பே அந்தக் கலையில் இல்லாத ஒரு கெளரவம்-அதாவது, அந்தத் தொழிலில் இல்லாத ஒரு கெளரவம் தன்னுடைய தொழிலில் இருப்பதாக அவளை அப்போது நினைக்க வைத்தது. ஆனால் சமூகம் அப்படி நினைக்காதபோது அவள் மட்டும் அப்படி நினைத்து என்ன