பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 17

உளைச்சலால் முணுமுணுக்க, அவள் வந்தாள்!-நிமிர்ந்த நன்னடை, நேர்க் கொண்ட பார்வையோடு வந்த அவளை, “கிடக்கிறான் அவன்! உன்னுடைய மல்லிகைப் பூ மணம் அவனுக்குப் பிடிக்காவிட்டால் என்ன? எனக்குப் பிடிக்கிறது, நீ வா’ என்று வரவேற்க வேண்டும் போல் தோன்றிற்று மோகனுக்கு. ஆனால் வரவேற்கவில்லை -எப்படி முடியும், ஏற்கெனவே கண்ட சூடே இன்னும் ஆறாமலிருக்கும்போது?

இந்த நிலையில் ஆசை முன்னால் தள்ள, அச்சம் பின்னால் இழுக்க, அவன் தவியாய்த் தவித்துக் கொண்டு இருந்தபோது, உதவி அதிகாரி வந்தார்; அவன் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக அவனுக்கு எதிர்த்தாற்போல் அவளை உட்கார வைத்துவிட்டுச் சென்றார்!

‘பழம் நழுவிப் பாலில் விழுந்துவிட்டது; இனி வாயில் விழ வேண்டியதுதான் பாக்கி ‘ என்று நினைத்த அவன், கொஞ்சம் துணிந்து தன் பார்வையை அவள்மேல் செலுத்திப் பார்த்தான்; ஆனால் அவளோ, தன்னுடைய பார்வையை அவன் மேல் செலுத்தவேயில்லை!

என்ன ஏமாற்றம், என்ன ஏமாற்றம் -எப்படியும் அவளுடைய கவனத்தைக் கவர்ந்தே விடுவது என்ற உறுதி பூண்டு அவன் கனைத்துப் பார்த்தான்; இருமிப் பார்த்தான்; தும்மிப் பார்த்தான் ஊஹாம்!

அதற்குமேல் பொறுக்க முடியவில்லை, அவனால், -'காது மந்தமாயிருக்குமோ?’ என்றான், அவள் காதில் விழும்படி, ‘புத்தி மந்தமாயிருக்குமோ!’ என்றாள் அவள், அவன் காதில் விழும்படி!

இப்படி முதல் நாள் போயிற்று; இரண்டாம் நாள்... அவள் கவனத்தைக் கவர்வது எப்படி என்று அவன் யோசித்துக் கொண்டு இருந்தபோது, அவளுக்குப் பின்னாலிருந்த ஒரு ஜன்னல் அவனுடைய பார்வையில் பட்டது. உடனே ஒரு காகிதத்தை எடுத்துப் பந்து போல்

ar rr rr – 9