பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 189

“ஆமாம்; ஒரு வருடம் இரண்டு வருடங்கள் அல்ல, நாலு வருடங்கள் வேலையாயிருந்தேன்!’

‘ஏன்? அவருடைய அம்மாவுக்கு சமைக்கத் தெரியாதா?”

‘அப்படி ஒன்றுமில்லை; அந்த அம்மாள் இடையில் கொஞ்ச நாட்கள் அவருடன் வாழவில்லை!”

‘ஏன் அக்கா?”

‘இல்லாத சுகத்தை நினைத்து இருக்கும் சுகத்தைக்கூடச் சிலர் இழந்துவிடுவதில்லையா, அந்த ரகத்தைச் சேர்ந்தவர் அந்த அம்மாள் கணவன். அதனால் அவர் மேற்கொண்ட சில பழக்க வழக்கங்கள் அந்த அம்மாளுக்குப் பிடிக்காமற் போய்விட்டன!”

‘அதற்காக?”

‘தன் மனைவி தன்னை விட்டுப் பிரிந்தாலும தன் மகன் தன்னை விட்டுப் பிரிவதை அவர் விரும்பவில்லை; அவனைத் தாயிடமிருந்து பிரித்துத் தன்னுடன் வைத்துக் கொண்டார். அப்படி வைத்துக்கொண்ட பிறகுதான் ஒட்டல் சாப்பாட்டைக் கொண்டு மட்டும் அவனைப் பராமரித்து விட முடியாது, அவனைப் பராமரிக்க ஒரு பெண்ணின் உதவியும் தேவை என்பது அவருக்குத் தெரிந்தது. அதற்காக என்னைத் தேடிப் பிடித்து வேலைக்கு வைத்துக்கொண்டார்!”

‘அப்படியானால் நீயும் ஒரு விதத்தில் அவருக்குத் தாயாய்த்தான் இருந்திருக்கிறாய் என்று சொல்லு?”

‘'நான் தாயாயிருந்தாலும் அவனுடைய தாயார் அவனைப் பார்க்காமல் இருப்பாளா?-வருவாள், அவர் இல்லாத சமயம் பார்த்து, தன் மகனைப் பார்ப்பாள்; அவர் வருவதற்குள் சுவடு தெரியாமல் போய்விடுவாள்’

‘அதற்கு நீ உடந்தையாயிருந்தாயாக்கும்?”

“ஆமாம், அதுதான் நான் செய்த குற்றம்; அந்தக் குற்றத்துக்காகத்தான் அவர் என்னை வேலையிலிருந்து