பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 காதலும்கல்யாணமும்

நேருகிறது?’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு,

தனக்குரிய இடத்தில் உட்கார்ந்தாள்.

அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த ரமா, “என்ன, காதல் கடிதமா?’ என்றாள் அவளை ஒரு தினுசாகப் பார்த்தபடி.

“ஆமாம், காதல் கடிதம்தான் மோகன் எழுதி யிருக்கிறார்; அதற்கு மேல் ஏதாவது தெரிய வேண்டுமா, உனக்கு ‘ என்றாள் பாமா, அவள் முகத்தில் அடித்தாற் போல்.

‘ஓடாத நாயைத் துரத்தி என்ன பிரயோசனம்?’ என்று எண்ணியோ என்னமோ, ரமா அதற்கு மேல் அவளை ஒன்றும் கேட்கவில்லை; முகத்தைத் திருப்பிக்கொண்டு விட்டாள்!

பாமா விடவில்லை; ‘ஏன், அது மணியின் காதல் கடிதமாயிருக்கும் என்று நீ நினைத்தாயா?’ என்றாள், அவளை வம்புக்கு இழுக்கும் நோக்கத்துடன்,

‘'நான் ஏண்டியம்மா, அப்படியெல்லாம் நினைக்கிறேன்?’ என்றாள் அவள்.

‘'நீ அப்படி நினைத்ததால்தான்டியம்மா, நான் கேட்கிறேன்!” என்றாள் அவள்.

அதற்குள் அந்த வழியாக வந்த பரந்தாமன், ‘என்ன அது?’ என்று கேட்கவே, ‘ஒன்றுமில்லை!” என்று இருவரும் ஏககாலத்தில் சொல்லிக்கொண்டே, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விழித்தார்கள்

தனக்குத் தெரிய வேண்டாம் என்பதற்காக அவர்கள் எதையோ மறைக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட பரந்தாமன், அதற்கு மேல் அவர்களைச் சோதனைக்கு உள்ளாக்க விரும்பாமல் தன் அறைக்குள் நுழைந்தார். அவருடையத் தலை மறைந்ததும், “என்னை மன்னித்துவிடு, பாமா! நான் கேட்டது தப்புத்தான்’ என்றாள் ரமா, தன் தலையைத் தாழ்த்தி.