பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 காதலும்கல்யாணமும்

‘அப்படி வா, வழிக்கு இப்போது நீ அகப்பட்டுக் கொண்டாயா, என்னிடம்?’ என்றாள் இவள், வெற்றிச் சிரிப்புடன். -

“அகப்பட்டுக் கொண்டேன், அகப்பட்டுக்கொண்டேன், அகப்பட்டுக்கொண்டேன்!-போதுமா? இனியாவது அதை விட்டுவிட்டுப் பேசாமல் உன் வேலையைப் பாரேன்: ‘ என்றாள் ரமா, கெஞ்சாக் குறையாக.

அப்பொழுதும் அவளை விடாமல், ‘இவ்வளவு ரகசியமாகக் காதலிப்பதைவிட, நீ அவரைப் பகிரங்கமாகவே காதலிக்கலாமே?’ என்றாள் பாமா.

‘அதற்கு உன்னுடைய மோகன் இல்லையே, அவர்’ என்றாள் அவள்.

“ஆம், அவர் என்னுடைய மோகன் இல்லைதான்!’ என்றாள் பாமா.

வலியவன்; ஆனால் எளியவன்-மோகனின் கடிதத்தைக் கொண்டுவந்து கொடுக்கும்போது மணி அப்படித்தான் தோன்றினான், பாமாவுக்கு.

இல்லாவிட்டால் நண்பர் கொடுக்கச் சொன்னார் என்பதற்காக அந்தக் கடிதத்தைக் கொண்டு வந்து அவர் என்னிடம் அவ்வளவு பவ்வியமாகக் கொடுத்திருப்பாரா? ‘போடா, போ! யார் என்று நினைத்துக்கொண்டாய், என்னை?” என்று வெகுண்டெழுந்து அவர்மேல் பாய்ந்திருக்க மாட்டாரா?

அவருக்குத்தான் என்ன துணிச்சல். அந்தக் கடிதத்தை எழுதி அவரிடம் கொடுக்க. அப்படியா, நான் அவரைத் தேடிக் கொண்டு போய்விடுவேன், அவருடைய வீட்டுக்கு? அதுவும் ஒரே ஒரு நாள் அவர் ஆபீசுக்கு வரவில்லை என்பதற்காக!

அந்த நிலைக்கு அவராலும் என்னைக் கொண்டுவந்து விட முடியாது; நானும் அதற்கு ஒரு நாளும் இடம் கொடுக்க