பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 197

மாட்டேன்-அப்படியிருக்கும்போது அவருக்கு ஏன் இந்த அச்சம்?

அன்று நான் சொன்னேனே, “நீங்கள் விரும்பினால் உங்களுடைய வீட்டுக்கு நானும் உங்களுடன் வரத் தயார்’ என்று-அதை எண்ணிப் பயந்துவிட்டார் போலிருக்கிறது!

பாவம், அவரைப் பற்றி எனக்குத் தெரியாதா? அவருக்குத் தெரியாமல் நான் அவரை அந்தத் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கிவிடுவேனா?-அதிலும், அக்கா வேறு அவரைப் பார்த்ததும் ஒரு புதுப் பிரச்னையைக் கிளப்பியிருக்கும்போது?

முக்கியமாக, அதைச் சொல்ல வேண்டும் என்றுதான் இன்று நான் அவரை இங்கே எதிர்பார்த்தேன்; அவர் என்னடா என்றால்...

ஆமாம், நீ விரும்பினால் ஒட்டல் அறைக்கு வரலாம்’ என்று அவர் எழுதியிருக்கிறாரே, அங்கே நான் போகலாமா? போவது அவ்வளவு நன்றாயிருக்குமா? அதுவும் அவருடைய நண்பருடன்...

ஏன் போகக் கூடாது?-என்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கும்போது எங்கேதான் போகக் கூடாது? எவருடன்தான் போகக் கூடாது?

இந்த எண்ணச் சுழலில் அன்றைய வேலையை எப்படியோ முடித்துவிட்டு அவள் வெளியே வந்தபோது, ‘உங்களுக்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன்; நான் வரட்டுமா?’ என்றான் மணி, அவள் தன்னுடன் வருகிறாளா இல்லையா என்பதைத் தெரிந்துக் கொள்வதற்காக.

‘நீங்கள் கேட்பதைப் பார்த்தால் எனக்கு எழுதிய கடிதத்தில் அவர் என்ன எழுதியிருந்தார் என்பது ஏற்கெனவே உங்களுக்குத் தெரியும் போலிருக்கிறதே?’ என்றாள் பாமா.

‘ஆமாம், அவன் இப்போதெல்லாம் எனக்குத் தெரியாமல் எதையும் மறைப்பதில்லை!” என்றான் அவன்.