பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 காதலும் கல்யாணமும்

‘அப்படியானால் நேற்றிரவு அவர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்ததைக் கூட... ‘

“ஆமாம், சொன்னான்’ ‘அதனால்தான் அவருடைய வீட்டில் அவருக்கு நிம்மதியில்லாமல் போய்விட்டதோ’

‘அப்படியொன்றுமில்லை; அவனுடைய அப்பா இன்னும் கொஞ்சம் பெரிய மனிதராகப் பார்க்கிறார். அதனால்தான் சிக்கல்’

‘அந்தச் சிக்கலில் அவருடைய கல்யாண விஷயமும் சம்பந்தப்பட்டிருக்கிறதா, என்ன?”

‘அதுதானேம்மா, எல்லாச் சிக்கலுக்கும் அடிப்படை யாயிருக்கிறது உலகத்தில்’

“அப்படியென்றால்?” ‘'சுயநலம் எங்கே ஆரம்பமாகிறதென்று தெரியுமா, உங்களுக்கு கல்யாணத்தில்தான் ஆரம்பமாகிறது; பேராசை எப்போது பிறக்கிறதென்று தெரியுமா, உங்களுக்கு? பிள்ளை பிறக்கும்போதுதான் அதுவும் பிறக்கிறது!”

‘அதனால்தான் நீங்கள் கல்யாணமே வேண்டாம் என்று இருக்கிறீர்களோ?”

‘என்னுடையக் கதைக் கிடக்கட்டும்; உங்களுடையக் கதைக்கு வாருங்கள். இப்போது நீங்கள் அவனைப் பார்க்க வரப் போகிறீர்களா, இல்லையா?”

‘அவசியமானால் சொல்லுங்கள்; வருகிறேன்!” ‘அது எப்படி எனக்குத் தெரியும்? உங்களுக்கு அவசியமென்று தோன்றினால் வாருங்கள்; இல்லாவிட்டால் வேண்டாம்!’

‘அவரும் விரும்பினால் வா என்றுதான் எழுதி யிருக்கிறார்; அதனால்தான் கொஞ்சம் யோசிக்கிறேன்"