பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 199

‘சரி, யோசித்துக் கொண்டே பஸ் ஸ்டாப் வரை வாருங்கள்; அங்கே நீங்கள் எந்த முடிவுக்கு வருகிறீர்களோ, அதே முடிவுக்கு நானும் வந்து விடுகிறேன்!” என்று சொல்லிக் கொண்டே அவன் நடந்தான்; அவள் அவனைத் தொடர்ந்தாள்.

அப்போது, ‘சார்’ என்று கத்திக்கொண்டே தனக்குப் பின்னால் யாரோ ஒடி வருவது போலிருக்கவே, மணி திரும்பிப் பார்த்தான். சங்கர் இரைக்க இரைக்க வந்து அவனுக்கு முன்னால் நின்று, ‘உங்களைக் கைது செய்ய வந்த போலீசார் மோகன் சாரைக் கைது செய்து அழைத்துக்கொண்டு போகிறார்கள், சார்’ என்றான் பரபரப்புடன்.

“எதற்கு?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டான் மணி. ‘எல்லாம் அந்தச் சுந்தரின் வேலை, சார் எங்கிருந்தோ கள்ளத்தனமாகக் கடத்திக்கொண்டு வந்த அபினை அவன் உங்களுக்குத் தெரியாமல் உங்கள் அறையில் போட்டுவிட்டுப் போலீசாருக்குத் தகவல் கொடுத்திருக்கிறான்’

அவ்வளவுதான்; விஷயம் புரிந்துவிட்டது அவனுக்கு. ‘அந்தச் சண்டாளனின் வீடு எங்கே இருக்கிறதென்று தெரியுமா, உனக்கு?” என்று சங்கரைக் கேட்டான்.

‘தெரியாதே, சார்!” என்றான் அவன். ‘இவ்வளவுதானா நீ? சரி, போ! அதை நானே தெரிந்துக் கொள்கிறேன்’ என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டு, சைக்கிள் பெடலின்மேல் காலை எடுத்து வைத்த மணி, ‘உங்களை மறந்துவிட்டேனே!’ என்று பாமாவின் பக்கம் திரும்பி, ‘நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள்; நான் பார்த்துக்கொள்கிறேன் அவனை!” என்று சொல்லிவிட்டுக் காற்றாய்ப் பறந்தான்

எங்கே-போலீஸ் நிலையத்துக்கு அல்ல; அருணாவின் வீட்டுக்கு!-அவனுடைய முகவரி ஒருவேளை அவளுக்குத் தெரிந்திருந்தாலும் தெரிந்திருக்கலாமல்லவா?