பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. எதிர்பாராத வரவேற்பு!

சிந்தர்-அவன்தான் அந்த வலையை விரித்தான் என்பது சங்கருக்கு எப்படித் தெரிந்தது? அவசரத்தில் அதைக் கேட்காமல் வந்துவிட்டோமே!

சட்டென்று சைக்கிளை நிறுத்தி, ‘சங்கர், சங்கர்’ என்றான் மணி.

‘என்ன சார்?’ என்றான் அவன், விரைந்து வந்து. ‘உன்னை ஒன்று கேட்க மறந்துவிட்டேனே, அவன்தான் அந்தத் துரோக வலையை விரித்தான் என்பது உனக்கு எப்படித் தெரியும்?”

‘அவனுடைய அப்பா சுகானந்தம் ஒரு கள்ளக்கடத்தல் பேர்வழி என்பது ஏற்கெனவே தெரியும் எனக்கு. அதற்கேற்றாற் போல் சர்மாஜி வேறு உங்கள்மேல் திடீரென்று அன்பு செலுத்த ஆரம்பித்திருக்கிறார். யார் மேலாவது அவர் அப்படி அன்பு செலுத்துகிறார் என்றால், அந்த அன்புக்குரியவருக்குப் பின்னால் அவர் குழி வெட்டுகிறார் என்று அர்த்தம். இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை; இவற்றையெல்லாம் வைத்துத்தான்...’

‘அப்படியானால் இந்தச் சதியில் அவரும் ஈடுபட்டிருப்பார் என்றா நீ நினைக்கிறாய்?”

‘சந்தேகமில்லாமல்; இல்லாவிட்டால் அவரே என்னைக் கூப்பிட்டு இங்கே அனுப்பியிருக்கமாட்டாரே’

“என்ன அவரா உன்னை இங்கே அனுப்பி வைத்தார்?” “ஆமாம் சார், ஆமாம். ஒடு, ஒடு, உடனே போய் அவரிடம் விஷயத்தைச் சொல்லு: அப்படியே போலீசாரிடமிருந்து தப்புவதற்காக அவர் கொஞ்ச நாட்கள் தலைமறைவாயிருந்தால் தேவலை என்று சொல்லு; அவருடைய அறையை உடனே வேறு எங்காவது மாற்றிக் கொண்டு விட்டால் அதைவிடத் தேவலை என்று நான்