பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 19

‘இதென்னடா வம்பாய்ப் போச்சு இவள் எழுந்து நிற்கும் வேகத்தைப் பார்த்தால் அந்த நாற்காலியையே தூக்கித் தன் தலையிலே போட்டாலும் போட்டுவிடுவாள் போலிருக்கிறதே? என்று பயந்த மோகன், தானும் அவளைத் தொடர்ந்து எழுந்து, மெல்ல அங்கிருந்து நழுவப் பார்த்தான்.

அப்போது, ‘போடுகிற சண்டையையெல்லாம் இப்போதே போட்டுவிடுங்கள், கல்யாணத்துக்குப் பிறகு சண்டை வேண்டாம்!’ என்று யாரோ சொல்வது அவர்கள் காதில் விழுந்தது. இருவரும் திரும்பிப் பார்த்தனர்; பியூன் பிச்சையா சிரித்துக் கொண்டிருந்தான்

3. கை கொடுத்த தெய்வம்

‘'காதலில் வெற்றியடைய வேண்டுமானால், எடுத்த வுடன் இணங்கிவிடும் பெண்களைக் காதலிக்காதே; எதிர்த்து நிற்கும் பெண்களைக் காதலி’ என்பது, மோகன் தன் சகதோழர்களிடமிருந்து கற்றுக்கொண்ட ஒரு பொன்மொழி

பொன்னின் மாற்று இருபத்திரண்டு காரட்டிலிருந்து பதினாலு காரட்டுக்கு வந்து விட்டாலும், அந்தப் பொன்மொழியின் மாற்று மட்டும் அப்படியேதான் இருந்தது என்பது அன்று மாலையே தெரிந்தது அவனுக்கு. ஆம், அலுவலகத்திலிருந்து வெளியே வந்த பாமாவை அன்றும் வழக்கம்போல் அவன் தொடர்ந்து சென்றபோது, அவள் அன்றும் வழக்கம்போல் அவனைத் திரும்பிப் பார்க்காமல் சென்றுவிடவில்லை; திரும்பிப் பார்த்தாள். முதல் தடவையாகத் தன்மேல் வீசப்பட்ட அந்த ‘ஐஸ்-கிரீம் பார்வை'யால் அவன் ஒரு கணம் மூச்சுவிடக்கூட மறந்து நின்றபோது, ‘உங்களுக்கு மூளையிருக்கிறதா?’ என்று அவள் வழக்கம்போல் அவனை உரத்த குரலில் கேட்கவில்லை; வழக்கத்துக்கு விரோதமான ரகசியக் குரலில்