பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 209

சொல்லு, அபின் மட்டும்தான் கடத்துகிறீர்களா? இல்லை, தங்கம், வைரம் ஏதாவது...’

‘அடக் கடவுளே, இது என்ன சோதனை எங்களுக்கு அதைப்பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாதே’

‘இப்படிச் சொன்னால் அதை நான் நம்பிவிடுவேன் என்று நினைக்கிறாயா? பயப்படாதேப்பா, பணம் பத்தும் செய்யும் என்றால், அந்தப் பணத்தைச் செய்யப் பதினொன்றும் செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான் என்னிடம் ஏன் உங்களுக்குப் பயம்? உண்மையில், நீங்கள் இருவரும் அந்தத் தொழிலில் ஈடுபட்டு இருக்கிறீர்கள் என்று தெரிந்ததும் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாயிருந்தது, தெரியுமா?”

“என்ன மகிழ்ச்சியாகவா இருந்தது, உங்களுக்கு?” ‘இல்லாமல் என்னவாம்? சில முட்டாள் தகப்பனார் களைப் போல என்னையும் கோபம் கொள்ளச் சொல்கிறாயா, ?”

‘அப்படியானால் நாங்கள் எங்கேயாவது போய், எதையாவது திருடிக்கொண்டு வந்தால் கூட...”

‘அகப்படாமல் திருடிக்கொண்டு வருவதாயிருந்தால் அதையும் நான் வரவேற்கத் தயாராய்த்தான் இருப்பேன்! ஏனெனில், எதைச் செய்தாலும் நம்முடைய அந்தஸ்து குறைந்துவிடக்கூடாது, பார்!’

‘அதாவது, பக்தன் தாசி வீட்டுக்குப் போனாலும் அவனுடைய மனம் பகவானிடத்தில் இருந்தால் சரி என்கிறீர்கள்; அப்படித்தானே?”

“ஆமாம், ஆமாம். பக்தனுக்குப் பகவான் எப்படியோ, அப்படித்தான் நமக்கு அந்தஸ்தும். எதைச் செய்தாலும் அதற்குப் பங்கமில்லாமல் செய்ய வேண்டும். இப்போது கூடப் பார், ஏற்கெனவே நீங்கள் அந்தத் தொழிலிலும் ாடுபட்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரிந்திருந்தால்

கா.க -14