பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 211

உங்களுக்குத் தெரியாதுபோல் இருக்கிறது! ஏனெனில் அவர்களும் புரிந்துகொண்டு விட்டார்கள், இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒருநாள் அது யார் தடுத்தாலும் நிற்காமல் இந்த உலகம் முழுவதும் வந்தே தீரும் என்பதை’ ‘உனக்குத் தெரியாது, தம்பி சோற்றுக்கு இல்லாதவன் சோசலிசம் பேசுவதற்கும், சோற்றுக்கு இருப்பவன் சோசலிசம் பேசுவதற்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கிறது. உதாரணமாக, சோற்றுக்கு இல்லாதவன் சோசலிசம் பேசுவதோடு நிற்கமாட்டான்; தன்னிடம் இரண்டு சட்டைகள் இருந்தால் கூட, அவற்றில் ஒன்றை எடுத்து இல்லாதவனுக்குக் கொடுத்து விடுவான். சோற்றுக்கு இருப்பவனோ அப்படிக் கொடுக்க மாட்டான்; கொடுக்காததோடு, அப்படிக் கொடுப்பதால் சோசலிசம் வந்துவிடாதென்றும், ஏனெனில் தனிப்பட்ட ஒருவன் முயற்சியால் அது கொண்டு வந்துவிடக் கூடியதல்ல வென்றும் காரண காரியங்களெல்லாம் காட்டிச் சாங்கோ பாங்கமாகப் பேசுவான்; அந்தப் பேச்சைக் கொண்டே அதனால் தான் அடையக்கூடிய ஆதாயங்களையெல்லாம் அடைந்துகொண்டே வருவான். நீயும் மோகனும் கூட இந்த இரண்டாவது வகை சோசலிஸ்ட்டுகளாய்த்தான் இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். இல்லாவிட்டால் அந்தத் தொழிலில் நீங்கள் ஈடுபட்டிருக்க மாட்டீர்கள் அல்லவா? என்ன, நான் நினைப்பது சரிதானே?’ என்று கேட்டுவிட்டுத் தன் கண்களைச் சிமிட்டினார் ஆபத்சகாயம்.

எப்படி இருக்கும் மணிக்கு? அவன் மறுபடியும் சிரித்தான்; சிரித்துவிட்டுச் சொன்னான்:

“என்ன சொன்னாலும் நீங்கள் எங்களை நம்பவே மாட்டீர்கள் போலிருக்கிறது!”

“கையும் களவுமாக அகப்பட்டுக்கொண்டப் பிறகுமா என்னை நம்பச் சொல்கிறீர்கள், உங்களை? சும்மா சொல்லப்பா? உன்னை எதற்காக இவ்வளவு தூரம் நான்