பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 215

‘அங்கே போவதில் பிரயோசனமில்லை; ஏனெனில் சர்மாஜி அங்கே இருக்கமாட்டார்!”

“வேறு எங்கே போயிருப்பார்?” “யாருக்குத் தெரியும், அங்கே உனக்காகப் போலீசார் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும்தான் எனக்குத் தெரியும்!”

“எதற்கு, என்னைக் கைது செய்வதற்குத்தானே? அதனாலென்ன, நீதி என் பக்கம் இருக்கும்போது எனக்கு என்ன பயம்?”

‘அதனால்தான் பயப்பட வேண்டும் என்கிறேன் நான்! இன்று எந்த நீதி என்னைக் கைது செய்தது, எந்த நீதி என்னை விடுதலை செய்தது? அதெல்லாம் சும்மா, நீ வா, இப்படி!”

‘உண்மைதான்! இன்று எந்த நீதி உன்னைக் கைது செய்தது, எந்த நீதி உன்னை விடுதலை செய்தது?”

அவன் சொன்னதைத் திருப்பிச் சொல்லிக்கொண்டே அவனை நோக்கி வந்தான் மணி.

மோகன் அவன் முதுகைத் தட்டிக் கொடுத்து, “உனக்காக விரித்த வலையில் நான் விழுந்துவிட்டதற்காக நீ வருத்தப்பட்டாயல்லவா? நான் வருத்தப்படவில்லை; மகிழ்ச்சியடைகிறேன்!” என்றான் தன் சோர்வை உதறித் தள்ளி.

மணி அவனை ஏற இறங்கப் பார்த்தான்-சிறிது நேரத்துக்கு முன்னால், ‘நடந்தது நடந்துவிட்டது; அதற் கென்ன இப்போது?’ என்று சொன்னவனா இவன்?-ஒன்றும் புரியவில்லை அவனுக்கு; மோகனைப் பார்த்தது பார்த்தபடி நின்றான்.

மோகன் தொடர்ந்து சொன்னான்: “ஆம், மணி! அது மட்டுமல்ல; நீ வாழ்வதற்காக நான் சாவதற்குக் கூடத் தயாராகிவிட்டேன், இப்போது!"