பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 காதலும்கல்யாணமும்

‘இருக்கட்டுமே, அதனாலென்ன? அந்தப் பணத்தைத் திரட்ட எத்தனையோ நேர் வழிகள் இருக்கும்போது, குறுக்கு வழிகளில் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?”

‘பணம் ஒருநாளும் நேர் வழியில் வருவதில்லை; குறுக்கு வழியில்தான் வருகிறது. அதற்கேற்றாற்போல் சமூகமும் உங்களிடம் பணம் இருக்கிறதா என்றுதான் கவனிக்குமே தவிர, அந்தப் பணம் எப்படி வந்தது என்று கவனிக்காது, வேறு யாராவது கவனித்து அது அப்படி வந்தது, இது இப்படி வந்தது’ என்று சொன்னாலும் அப்படிச் சொல்பவர்கள் பொறாமையால் சொல்கிறார்கள் என்றுதான் அதுசொல்லுமே தவிர, அதற்காக அது உங்களைப் போற்றிப் புகழ்வதை விட்டு விடாது’

‘என்ன இருந்தாலும் உண்மை’ என்று ஒன்று இருக்கிறது, பாருங்கள் அதை யாராலும் அழிக்க முடியாதல்லவா?”

‘அழிக்க முடியாதுதான்; ஆனால் அதற்காக அதை யாராலும் வளர்க்க முடியாது’

‘ஏன்?: ‘வீண் செலவு! அதனால்தான் அந்த உண்மை ஆதரிப்பார் யாரும் இல்லாமல் அனாதைக் குழந்தைபோல அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக இந்த உலகத்தில் அலைந்து கொண்டிருக்கிறது. அவ்வப்போது தோன்றும் மகான்களில் சிலர், அதனிடம் அனுதாபம் கொண்டு அதை எடுத்துப் பொதுப் பணத்தில் வளர்க்கிறார்கள் அவர்கள் உள்ளவரை அது நம் கவனத்தைக் கவருகிறது; அவர்கள் மறைந்ததும் அதுவும் நம் கவனத்தை விட்டு மறைந்துவிடுகிறது’

‘அழகாகப் பேசுகிறீர்கள்! ஆனாலும் உழைப்பில் நம்பிக்கை உள்ளவர்கள் நாங்கள்; உழைப்பே செல்வம் என்று நினைப்பவர்கள் நாங்கள். எங்களிடம் உங்களுடைய உபதேசம் எடுபடாது!'