பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 காதலும் கல்யாணமும்

கொள்கிறேன் என்று; அதன் பலனைத்தான் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறான்’

“என்னடா! நீயே மிரட்டுகிறாயா, என்னை?” ‘இல்லை; எச்சரிக்கிறேன்’ “எதற்கு?” ‘எப்போதும் நல்லவர்களின் பக்கத்தில் நில்லுங்கள்; அது உங்களுக்கும் நல்லது, உலகத்துக்கும் நல்லது. கெட்டவர்களின் பக்கத்தில் நிற்காதீர்கள்; அது உங்களுக்கும் கெட்டது, உலகத்துக்கும் கெட்டது’

தன் மகனா தன்னைப் பார்த்து இப்படிப் பேசுகிறான்? -ஆபத்சகாயத்தால் நம்ப முடியவில்லை; அவனை மேலும் கீழுமாகப் பார்த்தார்.

அதற்குள் ஒரு வாடகைக்காரில் மீண்டும் அங்கே வந்து இறங்கிய மணி, ‘அவசரத்தில் எதை முதலில் செய்ய வேண்டுமோ, அதைச் செய்ய மறந்துவிட்டேன்; இவனைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு, அப்படியே போலீசுக்கும் தகவல் கொடுக்க வேண்டாமா, நான்?’ என்று சொல்லிக்கொண்டே வந்து, கீழே விழுந்து கிடந்த சுந்தரைத் தூக்கப்போனான்.

‘நில் அவனைத் தொடாதே’ என்று கத்தினார் ஆபத்சகாயம்.

‘ஏன் தடுக்கிறீர்கள், என் கடமையை நான் செய்யவொட்டாமல்?’ என்றான் மணி.

‘அந்தக் கடமையைச் செய்ய எனக்குத் தெரியும்; நீ போய் உன் வேலையைப் பார்’

‘மிக்க மகிழ்ச்சி, உங்கள் உதவிக்கு நன்றி!’ கொஞ்சம் குத்தலாகவே இதைச் சொல்லிவிட்டு, எந்த வாடகைக் காரில் வந்தானோ அதே வாடகைக் காரில் அவன் திரும்பிப் போய்விட்டான். அவனுடைய தலை மறைந்ததும், ‘கடமையாம் கடமை ஆஸ்பத்திரியில் சேர்ப்பது இவருடைய