பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 223

கடமையென்றால், அடிப்பது ds. L- இவருடைய கடமைகளில் ஒன்றாய்தான் இருக்கும் போலிருக்கிறது? அயோக்கியப் பயல்’ என்று அவனைத் திட்டிக் கொண்டே சுந்தரைத் தூக்கி நிறுத்தப் போனார் ஆபத்சகாயம்.

அவனோ அவர் தூக்கி நிறுத்த நிறுத்த, தொப் தொப்பென்று கீழே விழுந்து கொண்டே இருந்தான். ‘இந்த அடிக்கே இப்படித் துவண்டு போய்விட்டானே, இவன்’ என்று சொல்லிக்கொண்டே அவனைத் தன் இரு கைகளாலும் ஏந்திக் கொண்டு போய்க் காருக்குள் கிடத்திவிட்டு, “அன்னபூரணி ஏ, அன்னபூரணி என்று குரல் கொடுத்தார் அவர்.

ஒன்றும் புரியாத நிலையில் சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த அவள், மெளனமே உருவாய் அவருக்கு முன்னால் வந்து நின்றாள்.

‘இன்னொரு முறை அந்தப் பயல் இங்கே வந்தால் அவனை உள்ளே விடாதே’ என்றார் அவர்.

“சரி” என்பதற்கு அடையாளமாக அவள் தன் தலையை மட்டும் ஆட்டினாள்.

‘நான் வருகிறேன், இவனைக் கொண்டு போய் அவன் அப்பாவிடம் ஒப்படைத்துவிட்டு’

இதைச் சொன்னதும் அவர் போய்க் காரில் உட்கார்ந்து, அவரே அதை ஒட்டவும் ஆரம்பித்தார்.

அப்போது, ‘தண்ணிர்,தண்ணிர்’ என்று முனகினான், சற்றே மூர்ச்சை தெளிந்த சுந்தர்.

‘'நீ கேட்பதற்கு முன்னாலேயே அதை நான் உனக்குக் கொடுத்திருக்க வேண்டும்; மறந்துவிட்டேன், ஆத்திரத்தில்’ என்று தானே இறங்கிப் போய்த் தண்ணிர் கொண்டு வந்தார் அவர்.

அதை நடுங்கும் கைகளால் வாங்கிப் படுத்தபடியே குடித்துவிட்டு, ‘இப்போது நீங்கள் என்னை எங்கே