பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 காதலும்கல்யாணமும்

அழைத்துக் கொண்டு போகப்போகிறீர்கள்?’ என்றான் சுந்தர்.

‘ஏன், உன் அப்பாவிடம்தான்’

“ஐயோ, வேண்டாம் அவர் இப்போதுள்ள இடத்தில் நான் போய் அவரைப் பார்த்தால் அது அவருக்குப் பிடிக்காது!”

‘ஏன்,அவர் இப்போது எங்கே இருக்கிறார்?”

‘தயவுசெய்து அதைப்பற்றி என்னிடம் கேட்காதீர்கள்; அவர் இப்போது கீழ்ப்பாக்கத்தில் இருக்கிறார்; அங்கேதான் தன்னை வந்து பார்க்கும்படி அவர் உங்களிடம் சொல்லச் சொன்னார்’

‘அப்படியானால் நான் உன்னை ஏதாவது ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடட்டுமா?”

“எதற்கு, இங்கே போன மானம் போதாதா? என்னைப் பேசாமல் கொண்டு போய் என் அம்மாவிடம் சேர்த்து விடுங்கள்; அவர்களுக்குத் தெரிந்த வைத்தியமே இதற்குப் போதும்’

‘அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?”

‘அடையாறில்’

‘சரி, அப்படியே செய்கிறேன்’ என்று அவர் காரைத் கிளப்பினார்; அவன் கையை ஊன்றி மெல்ல எழுந்து, சாய்ந்தாற்போல் காலை நீட்டி உட்கார்ந்துகொண்டான்.

‘உனக்கு வருத்தமாயிருக்கும், உங்களுடைய சண்டையில் நான் குறுக்கிடவில்லை என்று; இல்லையா?” என்றார் ஆபத்சகாயம், தன் மனச்சாட்சி தன்னை உறுத்த.

‘அப்படியொன்றுமில்லை’ என்றான் அவனும் தன் மனத்தைத் தானே ஏமாற்ற.

‘'நான் குறுக்கிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும், தெரியுமா? உங்களுடைய சண்டையின் முடிவு அவனுக்குச் சாதகமாகியிருக்கும்; தனக்குக் கிடைக்க வேண்டிய தண்டனை