பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 225

யிலிருந்து தப்பிவிட அது அவனுக்கு ஏதுவாகியிருக்கும். அதனால்தான் நான் குறுக்கிடவில்லை’ என்றார் அவர், தன் ‘சட்ட ஞானத்தைச் சற்றே வெளிப்படுத்தி.

அவன் சிரித்தான்; ‘ஏன் சிரிக்கிறாய்?” என்று அவர் கேட்டார்.

‘ஒன்றுமில்லை; எனக்கு நேர்ந்த கதி உங்களுக்கும் நேருவதை நான் விரும்பவில்லை’ என்றான் அவன்.

அவர் சிரித்தார்; ‘ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று அவன் கேட்டான்.

‘ஒன்றுமில்லை; அனுபவபூர்வமாக நீ அதைச் சொல்லும்போது என்னால் எப்படி நம்பாமல் இருக்க முடியும்?’ என்றார் அவர்

அவன் மெளனமானான்; அவரும் மெளனமானார். இருவரும் ஒருவரையொருவர் எப்படியோ சமாளித்துக் கொண்டு விட்ட திருப்தியில்தான்

மணி எதிர்பார்த்தபடி, அவன் தங்கியிருந்த ஒட்டலில் அவனுக்காகப் போலீசாரும் காத்துக்கொண்டிருக்கவில்லை; சர்மாஜியும் காத்துக்கொண்டிருக்கவில்லை. வழக்கம்போல் சர்வர் சங்கர்தான் அவனுக்காக அங்கே காத்துக் கொண்டிருந்தான்.

“என்ன சங்கர், எங்கே சர்மாஜி’ ‘அவருக்கென்னப் பைத்தியமா பிடித்திருக்கிறது, கந்தரைப்போல் உங்களைத் தேடி வந்து உங்களிடம் அகப்பட்டுக் கொள்ள?”

“அது எப்படித் தெரிந்தது, உனக்கு?” ‘சர்மாஜி அதைப் பார்த்துவிட்டு வந்துதானே அவசர அவசரமாக என்னைப் பெங்களுருக்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு வரச் சொன்னார்?”

‘அப்படியானால்...’

கா.க -15