பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 231

மகளை இரண்டாந்தாரமாகக் கொடுப்பது என்றுத் தோன்ற வில்லையா? அதிலும், முதல் மனைவி வேறு உயிருடன் இருக்கும்போது?

இன்று சொல்கிறார், அருணாவுக்காக அவளை விவாகரத்து செய்துவிடுவதாக; நாளை இன்னொருத்திக்காக அவர் அருணாவையும் விவாக ரத்து செய்துவிடுவதாகச் சொன்னால்,

சொன்னால்தான் என்ன, அதனால் அவளுடைய வாழ்க்கையே பாழாகிவிடுமா?

அப்படித்தான் சிலர் சொல்கிறர்கள்; ஆனால் அதில் ஏனோ தனக்கு மட்டும் அவ்வளவு நம்பிக்கை இல்லை!

வயதானவராச்சே, சீக்கிரம் கண்ணை மூடிவிடுவாரே என்று சிலர் சொல்லலாம். அப்படியே மூடிவிட்டால்தான் என்ன?-விட்டது சனியன், ராஜாவின் ராஜ்யம் ராணியின் ராஜ்யமாகிவிடுகிறது:

இது போன்ற இனிய எண்ணங்க'ளில் மிதந்துக் கொண்டே ஆபத்சகாயம் கீதாவின் வீட்டுக்குள் நுழைந்தபோது, அங்கே கீதா இல்லை; அவளுக்குப் பதிலாக சுகானந்தமே அவரை எதிர்கொண்டழைத்து, ‘உங்களிடம் காரைக் கொடுத்து விட்டு எங்கேப் போய்விட்டார் துரை, சினிமாவுக்கா?’ என்றார் கேலியும் கிண்டலுமாக.

‘தெரியவில்லை; அதைப்பற்றி நானும் கேட்க வில்லை’ என்றார் ஆபத்சகாயம், அடக்கமே உருவாக,

‘கேட்காவிட்டால் போகிறது; ஆளையாவது நன்றாகப் பார்த்துக்கொண்டீர்களோ, இல்லையோ?”

‘பார்த்துக்கொண்டேன், பார்த்துக்கொண்டேன்’ ‘நீங்கள் பார்க்கவேண்டும் என்பதற்காகத்தான் அவனை நான் அங்கே அனுப்பிவைத்தேன். வாருங்கள், போவோம்’ என்று ஆபத்சகாயத்தை மேலே அழைத்துக்கொண்டு போனார் அவர்.