பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 காதலும்கல்யாணமும்

‘படிக்க விடாததோடு நின்றால் தேவலையே? வேறு என்னவெல்லாமோ செய்யச் சொல்கிறதே! அதுதானே எனக்குக் கவலையாயிருக்கிறது?’ என்றார் அவர், உண்மையான கவலையுடன்

‘அந்தக் கவலை இனி உங்களுக்கு வேண்டாம், நான் கவனித்துக்கொள்கிறேன் அவனை’ என்றார் ஆபத்சகாயம், தனக்கு அந்த நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவருக்காவது அந்த நம்பிக்கை இருந்துவிட்டுப் போகட்டுமே என்று!

இந்தச் சமயத்தில் டெலிபோன் மணி கிணு கினுக்கவே, ரிசீவரை எடுத்துக் காதில் வைத்துக்கொண்டு, ‘'சுகானந்தம் பேசுகிறேன்; யார் வேண்டும் உங்களுக்கு?” என்று கேட்டார் அவர்.

அதற்குமேல் அவர் ஒன்றும் பேசாமல், ம், ம்’ என்று ‘ம்’ கொட்டிக்கொண்டிருக்கவே, ‘யார் அது?’ என்று பொறுமையிழந்து கேட்டார் ஆபத்சகாயம்.

‘இன்ஸ்பெக்டர் இருதயசாமிப் பேசுகிறார்; கொஞ்சம் பொறுங்கள், இதோ வந்துவிட்டேன்’ என்று அந்த இருதயசாமி சொல்லவேண்டியதைச் சொல்லி முடித்ததும் அவர் ஆபத்சகாயத்தின் பக்கம் திரும்பி, ‘சுந்தரை யாரோ மணி என்பவன் அடித்துவிட்டானாம்! இதில் வேடிக்கை என்னவென்றால் சுந்தர் வந்து புகார் செய்வதற்குப் பதிலாக மணி வந்துப் புகார் செய்து இருக்கிறானாம், அவனைத் தான் அடித்து விட்டதாக இது உண்மையா? என்று சுந்தருக்குப் ‘போன் செய்து கேட்டால், சுத்தப் பொய்; என்னை எவனும் அடிக்கவில்லை, அடிக்கவும் முடியாது!” என்கிறானாம். இதற்கு நான் என்ன செய்யட்டும் என்று அவர் என்னைக் கேட்கிறார்: நீங்கள் தான் சொல்லுங்களேன், என்ன செய்யச் சொல்லலாம் என்று?” என்றார் ரிசீவரைக் கையிலேயே வைத்துக்கொண்டு.

இதைக் கேட்டதும் ஆபத்சகாயத்துக்குத் திருடனைத் தேள் கொட்டியது போலிருந்தாலும் அதை அவர் வெளியே