பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 காதலும்கல்யாணமும்

அந்தப் பெண்ணைப் பற்றிக் கேட்கலாமா?” என்றான் மணி. ‘அதற்காக அவளுக்கு முன்னால் நீ என் முகத்தில் அடித்தாற்போல் அப்படிப் பதில் சொல்லிவிட்டுப் போவதா?”

‘அந்த மான உணர்ச்சியாவது இன்னும் உன்னை விட்டுப் போகாமல் இருப்பது நீ பிறந்த மண்ணின் விசேஷம்; அதற்காக நான் மகிழ்கிறேன்-வரட்டுமா?” என்றான் மணி.

“தாராளமாக!’ என்றான் மோகன். மணி அவனுக்காக இரங்குவதுபோல் அவனை மேலுங் கீழுமாகப் பார்த்தான். அது பிடிக்கவில்லை அவனுக்கு: “நீ ஒன்றும் எனக்காக இரங்க வேண்டாம்!’ என்றான் அவன். ‘இரங்கவில்லை; எச்சரிக்கிறேன். ஸ்கூட்டர் ரிப்பேராகா விட்டாலும் உடம்பு ரிப்பேராகிவிடப்போகிறதென்று!” என்றான் மணி.

‘சரிதான் போடா. மகாப் பெரிய மனுஷன் மாதிரிச் சொல்ல வந்துவிட்டான்’ என்று அலட்சியமாகச் சொல்லிக் கொண்டே ஸ்கூட்டரின் மேல் ஏறி அமர்ந்த மோகன், தன்னுடைய பார்வையிலிருந்து வெகு தூரம் சென்றுவிட்ட பாமாவைப் பிடிப்பதற்காக மணியைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் விரைந்தான்!

மணியோ அவனுக்காகத் தன் அடிவயிற்றில் அடித்துக் கொண்டு மேலே சென்றான்.

மயிலையில் இருந்த தன்னுடைய வீட்டுக்குச் செல்வதற்காகக் கடற்கரையோரமாக இருந்த ஒரு பஸ்ஸ்டாப்பில் வழக்கம் போல் வந்து நின்றாள் பாமா-ஆம், அவர்கள் வேலை பார்க்கும் அலுவலகம் சேப்பாக்கத்தில் தான் இருந்தது.

முதல் பஸ் வந்து நின்றது-அதில் வழக்கம்போல் ஏறி உட்கார்ந்துவிடவில்லை, அவள்-நின்றாள்!