பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 காதலும் கல்யாணமும்

‘அதற்காக நீ உன் அப்பாவை எதிர்த்து நிற்காதே! அதுவும் பிடிக்கவில்லை எனக்கு. என்ன இருந்தாலும் அவர் உன் தகப்பனார்; அவருக்கு நீ அடங்கித்தான் நடக்க வேண்டும்’ என்றாள் அவள், பேச்சோடு பேச்சாக.

‘எந்த வகையில் அடங்கி நடக்கச் சொல்கிறாய், என்னை? அவர் திருடர்களுக்குத் துணையிருக்க வேண்டும் என்கிறார்; நானும் துணையாயிருக்க வேண்டுமா அவர் கள்ளக்கடத்தல் பேர்வழிகளுக்கு உடந்தையாயிருக்க வேண்டும் என்கிறார்; நானும் உடந்தையாயிருக்க வேண்டுமா? அவர் பணத்துக்காக ஓர் இளம் பெண்ணின் வாழ்க்கையையே பலி கொடுக்க வேண்டும் என்கிறார்; நானும் பலி கொடுக்க வேண்டுமா? எத்தனையோ அயோக்கியர்களுக்கு மத்தியில் இந்த வீடு தேடி வந்த ஒரே ஒரு யோக்கியனை அவர் இனி உள்ளே வர வேண்டாம் என்கிறார்; நானும் உள்ளே வரவேண்டாம் என்று சொல்ல வேண்டுமா...?’’

அவன் அடுக்கினான்; அவள் திணறிப்போய், ‘போதுமடா, போதும் வயதுக்கு வந்த பிள்ளையையும் பெண்ணையும் எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்று அவருக்கும் தெரியவில்லை; அவருடைய விருப்பப்படியே நடப்பதுபோல நடந்து, அவரை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று உங்களுக்கும் தெரியவில்லை. நான் என்ன செய்வேன்? அவரைப் பார்ப்பேனா, உங்களைப் பார்ப்பேனா?” என்றாள் வாடிய முகத்துடன்.

‘அவரையே பார்த்துக்கொள் அம்மா, எங்களை நாங்களேப் பார்த்துக்கொள்கிறோம்’

இதைச் சொல்லிவிட்டு அவன் அங்கே நிற்கவில்லை; ‘விர்'ரென்று வெளியே போய்விட்டான்-மணியைப் பிடிக்கத்தான்!

அவன் போன திசையையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்ற அன்னபூரணி, ‘நேற்றுவரை அசடாயிருந்த