பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 241

கூட நாடமுடியாது நம்மால் என்று நினைத்துக்கொண்டி ருந்தால், மறுபடியும் வந்து நிற்கிறான் இவன் அவருக்கு முன்னால்-எதற்காக அடிபட்ட சுந்தரைக் கொண்டுபோய் ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்காக; அவனை நான் அடித்து விட்டேன்’ என்று இவனே போய்ப் போலீசாரிடம் புகார் செய்வதற்காக

இப்படியும் ஒரு வேடிக்கையான மனிதன் இருப்பானா, இந்த உலகத்தில்-ைசரி, ஏதோ கெட்ட காலம்; இனி இவனை யாராலும் காப்பாற்ற முடியாது என்று இவனைப் பொறுத்த வரை எல்லா நம்பிக்கைகளையும் இழந்துவிட்டு நிற்கும் போது மீண்டும் வருகிறான், என்னை ஒட்டல் அறைக்கு வரவேண்டாம் என்று எச்சரிக்க!

இவன் சொன்னால் இவனுடைய அறைக்கு நான் வராமல் இருந்துவிடுவேனா -நான் சொல்வதை இவன் கேட்காத போது, இவன் சொல்வதை மட்டும் நான் ஏன் கேட்க வேண்டுமாம் -பார்த்துக்கொண்டே இருங்களேன், என்னதான் நடக்கப் போகிறதென்று?

இவன் இப்போது வழியிலேயே கிடைத்தால் ஆச்சு, கிடைக்காவிட்டால் இவனுடைய அறைக்கு நான் போகத்தான் போகிறேன்-என்ன செய்து விடுவானாம், இவன் என்னைை

யாரோ ஒருத்திக்காக இவன் மட்டும் என்னப் பாடு வேண்டுமானாலும் படலாம், இவனுக்காக நான் எந்தப் பாடும் படக் கூடாதா?

இருடா பயலே, இரு-அருணாவுக்கும் மற்றும் எனக்கும் முதலில் கல்யாணமாகட்டும்; அதற்குப் பிறகு பார்,நீ வேண்டாமென்றாலும் உன்னுடைய தலையிலே ஒரு பெண்ணைப் பிடித்துப் பலவந்தமாகக் கட்டி, நீ வீண் விவகாரத்துக்குப் போகும் போதெல்லாம் அவளைக் கொண்டு உன்னை நான் மத்தால் மெயத்தச் சொல்லா விட்டால் என் பெயர் மோகன் அல்ல!

கா.க -16