பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 245

ஒருவேளை அவனே சொல்லியிருப்பானோ, இல்லை’ என்று சொல்லச் சொல்லி?-சீச்சீ, அப்படி இருக்காது!நேற்றைய மோகனாயிருந்தால் ஒருவேளை அப்படிச் சொல்லியிருக்கலாம்; இன்றைய மோகன் ஒருநாளும் அப்படிச் சொல்லியிருக்க மாட்டான்

ஆம், அன்றிருந்த மோகன் வேறு; இன்றிருக்கும் மோகன் வேறு.

ஆனாலும், ‘யாரோ ஒருத்தி"க்காக நான் எடுத்துக் கொண்ட சிரமம் அன்றுதான் பிடிக்கவில்லையென்றால், இன்றும் பிடிக்கவில்லை போலிருக்கிறதே, அவனுக்கு-ைஒரு வேளை அந்த யாரோ ஒருத்தி தன் தங்கை தான் என்று தெரிந்தால் பிடிக்குமோ?

பிடிக்கும்; சந்தேகமில்லாமல் பிடிக்கும்-ஆனால் அதற்காக அவளுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறி அவளை அவனிடமும் அவனைச் சேர்ந்தவர்களிடமும் காட்டிக் கொடுத்துவிட முடியுமா, என்னால்?-அது முடியாது; அது என்னால் முடியவே முடியாது.

அதற்காக வேறு வழியில் என்னை ஒழித்துக் கட்ட முயன்ற அந்த சுந்தரை அவர்களுக்கு முன்னால் உதைக்காமலாவது இருந்திருக்க முடியுமா, என்னால்?அதுவும் முடியாது; அதுவும் என்னால் முடியவே முடியாது நான் என்ன ஏசுவா?-ஒரு கன்னத்தில் அடித்தால், இன்னொரு கன்னத்தையும் திருப்பிக் காட்ட9

நான் என்ன, புத்தரா?-கொல்லவிருப்பது ஆட்டுக்குட்டி யாயிருந்தாலும், அதற்காகக் குனிந்து என் கழுத்தை நீட்ட?

நான் என்ன, காந்தியா?-செருப்பால் அடித்து என் பல்லை உடைத்தாலும், அனுதாபத்துக்குரிய அவனை விட்டு விடுங்கள்!’ என்று அப்போதும், அஹிம்ஸா தர்மத்தைக் கடைப்பிடிக்க?

இல்லை-நான் ஏசு இல்லை; நான் புத்தர் இல்லை; நான் காந்தியும் இல்லை!