பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 காதலும்கல்யாணமும்

இறுதி வணக்கமாவது?-இப்படி எழுதி வைத்துவிட்டு எவனாவது இந்தக் கடலில் விழுந்து கிழுந்து செத்துத் தொலைந்தானா, என்ன?-அடப் பாவி, இன்னும் கொஞ்சம் முன்னாலேயே இந்தக் கடிதத்தை நான் பார்த்திருக்கக் கூடாதா?

கடிதத்தை மடித்து அவன் வைத்தபடியே வைத்து விட்டுக் கரையோரமாகச் சிறிது தூரம் ஓடிப் பார்த்தான்; ஒரு தடயமும் கிடைக்கவில்லை.

கடலில் குதித்துச் சிறிது தூரம் நீந்தியும் பார்த்தான்; எதுவும் தட்டுப்படவில்லை, அவன் கைக்கு?

‘நல்லது, ரொம்ப நல்லது, காணாமற்போனதே ரொம்ப ரொம்ப நல்லது. உன்னை நான் கண்டுபிடித்திருந்தால், உனக்கு நான் உயிர்பிச்சை அளித்திருந்தால்,அதற்காக என்னை நீ அடிக்கக்கூட வந்திருப்பாய்-'இந்த அழகான உலகத்தில் மறுபடியும் என்னை நீ ஏன் வாழவிட்டாய்?” என்று ஓம் சாந்தி, ஓம் சாந்தி!’ என்று சொல்லிக்கொண்டே, எந்தவிதமான ஏமாற்றமுமின்றி அவன் மறுபடியும் கரைக்கு வந்தான்; கடிதத்தை எடுத்து, விட்ட இடத்திலிருந்து

படிததான:

‘நீங்கள் சொன்னிர்களே, ‘நாலும் தெரிந்த நாற்பத் தெட்டு ஒன்றைப்பற்றி, அந்த நாற்பத்தெட்டை நீங்கள் சொல்வதற்கு முன்னாலேயே தெரியும், எனக்கு தெரியும் என்றால், ஆளை நீங்கள் காட்டுவதற்கு முன்னால் எனக்குத் தெரியாது; அவருடைய குணாதிசயங்கள் மட்டுமேத் தெரியும்

‘எப்படித் தெரியும் என்கிறீர்களா?-சொல்கிறேன்:

அந்த நாற்பத்தெட்டு'க்கு இருபத்து நாலில் ஒரு செல்வம் இருக்கிறது. அந்தச் செல்வத்தைத் துரதிர்ஷ்ட வசமாக நான் காதலித்தேன். அது என்னிடம் காதல் உரையாடுவதாக எண்ணிக்கொண்டு, வாயில் வந்தபடி என்னவெல்லாமோப் பிதற்றும். அந்தப் பிதற்றல்