பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 257

இரண்டுங் கெட்டான் நிலையில்தான் நேற்றும் இருந்தேன்; இன்றும் இருக்கிறேன்’

‘இல்லை; இன்று கொஞ்சம் வேறுபட்டிருக்கிறீர்கள்’ அவள் அப்படிச் சொன்னதும், அவன் தன்னைத் தானே ஒரு முறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான்; பார்த்துக் கொண்டே சொன்னான்:

“ஆம், இன்று நான் கொஞ்சம் வேறுபட்டுத்தான் இருக்கிறேன்! இல்லாவிட்டால் இன்று மட்டும் தன்னுடன் இருக்கும்படி அவன் அத்தனைக் கெஞ்சுக் கெஞ்சியும் நான் வேலைக்கு வந்திருப்பேனா?”

“எவன்) : ‘ஒ, நானே அகப்பட்டுக்கொண்டு விட்டேனா உங்களிடம்? அவன்தான், உங்கள் காதலன்...’

“எதற்காகக் கெஞ்சினார், உங்களை?” ‘அதுதான் புதிய கதை; அந்தக் கதையைத்தான் என்னிடமிருந்து தெரிந்துகொள்வதைவிட அவனிடமிருந்து தெரிந்துகொள்வது நல்லது என்றேன், நான்’

‘ஏன், நீங்கள் சொல்லக்கூடாதா அதை’ ‘மன்னியுங்கள், அதை நான் சொல்வதற்குமில்லை; சொல்லவும் முடியாது!”

‘சரி, அவரை நான் பார்ப்பதற்காவது...’ ‘ஏற்பாடுதானே, அவசியம் செய்கிறேன்!” ‘நன்றி; நான் வரட்டுமா?’ என்றாள் அவள், இம்முறை அவனை முந்திக் கொண்டு

‘அந்தப் பெருமை நமக்கு வேண்டாம்; ஒளவை கொடுத்த தென்னை மரத்துக்கே இருக்கட்டும்’ என்றான் அ1ெனெ.

‘எந்தப் பெருமை?” ‘நன்றி காட்டும் பெருமைதான்!” அவள் சிரித்தாள்; அவன் அதை வெறுத்தான்

கா.க - 17