பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 காதலும்கல்யாணமும்

‘ஏன், உடம்பை ரிப்பேராக்கிக் கொள்ளவா?’ என்றாள் அவள், குறுநகையுடன்.

‘ஆனால் என்ன, அதைச் சரிப்படுத்தத்தான் நீ இருக்கிறாயே?’ என்றான் அவன், அதற்கும் விட்டுக் கொடுக்காமல்.

அப்போது, இப்போதாவது ஏறுகிறாயா, இல்லையா?” என்பது போல் நாலாவது பஸ் வந்து அவளுக்கு முன்னால் நின்றது. அதைப் பார்த்ததும், ‘ஆசையைப் பார், ஆசையை’ என்பது போல் மீண்டும் ஒருமுறை அழகு காட்டிவிட்டு, அதில் ஏறிக்கொண்டாள் அவள்!

ஏன் இப்படி? எதற்காக இந்த அவசரம்? அதுவும் தெரியவில்லை, அவளுக்கு

4. போலீஸ், போலீஸ்!??

6 &

அழகு காட்டினால் சரோஜா தேவி; காட்டாவிட்டால் தேவிகா-இந்த இரண்டு நட்சத்திரங்களும் சேர்ந்த ஒரே நட்சத்திரம் என் கனவுக் கன்னி!’

தூங்கும்போதுகூட இப்படி உளறுவது யாராயிருக்கும்? வேறு யாராயிருக்கப் போகிறார்கள், அண்ணாவாகத்தான் இருக்கும்!...

இந்தத் தீர்மானத்துடன் அன்றும் பரீட்சைக்காகப் படித்துக் கொண்டிருந்த அருணா மேலே படித்தபோது, உளறல் தொடர்ந்தது.

‘நீ திட்டினால் உறைக்கவில்லை; அடித்தால் வலிக்கவில்லை-'ஏன்? என்று தெரியவில்லையே, எனக்கு!” அருணா சிரித்தாள்!-அவள் சிரிப்பொலியால் தூக்கம் கலைந்து எழுந்த அவளுடைய அம்மா, ‘இந்த நேரத்தில் உனக்கு என்னடி சிரிப்பு, படிப்பதை விட்டுவிட்டு!”